பார்த்தவுடன் சுவைக்க தூண்டும் !!சுவையான தேன் மிட்டாய் செய்யலாம் வாங்க !..

0
174

பார்த்தவுடன் சுவைக்க தூண்டும் !!சுவையான தேன் மிட்டாய் செய்யலாம் வாங்க !..

தேவையான பொருட்கள்..இட்லி புழுங்கல் அரிசி-1 கப், உளுந்து-1/4 கப்,சர்க்கரை-1 1/2 கப்,ஜவ்வரிசி மாவு- 1 மேஜைக்கரண்டி,பேக்கிங் பவுடர்- 1/4 மேஜைக்கரண்டி, ஆரஞ்சு பவுடர்- 1 சிட்டிகை,உப்பு- 1 சிட்டிகை, எலுமிச்சம் பழம்- 1/2 மற்றும் தேவையான அளவு எண்ணெய்.

வாங்க எப்படி செய்வதென்று பார்க்கலாம்:தேன் மிட்டாய் செய்முறை,முதலில் அரிசி மற்றும் உளுந்தை நன்கு கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் ஜவ்வரிசியை சேர்த்து அதை சுமார் 4 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.இப்பொழுது நாம் ஊற வைத்து எடுத்து வைத்திருக்கும் அரிசி, உளுந்து, மற்றும் ஜவ்வரிசியோடு ஒரு சிட்டிகை அளவு உப்பை மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் தெளித்து அதை நன்கு அரைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.

அடுத்து ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் அளவு சர்க்கரையை கொட்டி அதில் முக்கால் கப் தண்ணீர் ஊற்றி அதை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து சர்க்கரை நன்கு கரையும் வரை ஒரு கரண்டியின் மூலம் கிண்டி விடவும்.சர்க்கரை நன்கு கரைந்த பின் அடுப்பை முற்றிலுமாக குறைத்து விட்டு அதை சுமார் 5 லிருந்து 6 நிமிடம் வரை அப்படியே அடுப்பில் வைத்து சர்க்கரை பாகு சரியாக ஒரு கம்பி பதத்தை எட்டியவுடன் அடுப்பை அணைத்து விடவும்.சர்க்கரை பாகு ஒரு கம்பி பதத்தை தாண்டி விட்டால் அது மிட்டாய் உருண்டைகளில் இறங்காது. ஒரு வேளை சர்க்கரை பாகு ஒரு கம்பி பதத்தை தாண்டி விட்டால் அதில் மீண்டும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதை கொதிக்க வைத்து சர்க்கரை பாகை ஒரு கம்பி பதத்திற்கு கொண்டு வரவும்.பின்பு இந்த சர்க்கரை பாகை அடுப்பிலிருந்து இறக்கி அதில் சுமார் 3 அல்லது 4 சொட்டு எலுமிச்சை சாறை சேர்த்து கொள்ளவும்.

அடுத்து நாம் அரைத்து வைத்திருக்கும் மாவை எடுத்து அதில் ஆரஞ்சு பவுடர் மற்றும் பேக்கிங் சோடாவை போட்டு அதை நன்கு கலந்து கொள்ளவும். இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் தேன் மிட்டாயை போட்டு பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.எண்ணெய் சுட்டதும் கையை தண்ணீரில் நனைத்து நாம் அரைத்து வைத்திருக்கும் மாவை சிறிது அளவு எடுத்து எண்ணெய்யில் சிறு சிறு உருண்டைகளாக போடவும். கடாயின் அளவிற்கேற்ப உருண்டைகளைப் போட்டு அது அனைத்து புறங்களிலும் மொறு மொறுப்பாக வந்ததும் அதை எடுத்து எண்ணெய்யை நன்கு வடித்து அப்படியே நாம் செய்து வைத்திருக்கும் சர்க்கரை பாகில் போட்டு அதை சுமார் 15 லிருந்து 20 நிமிடம் வரை ஊற விடவும்.

சர்க்கரை பாகு நன்கு வெது வெதுப்பாக இருக்கும்போதே தேன் மிட்டாய்களை அதில் போட்டால் தான் அது நன்றாக ஊரும்.20 நிமிடத்திற்கு பிறகு சர்க்கரை பாகில் இருந்து தேன் மிட்டாய்களை எடுத்து சர்க்கரையில் உருட்டியோ அல்லது அப்படியேவும் பரிமாறலாம்.இப்பொழுது உங்கள் இனிப்பான மற்றும் மிகவும் சுவையான தேன் மிட்டாய் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.

Previous articleபயன்படாத பிளாஸ்டிக்கை பயன்படும் பொருளாக வீட்டிலே மாற்றலாம்! எப்படி தெரியுமா?
Next articleபுரட்டாசி அமாவாசை நாளில் முன்னோர்களின் ஆசி கிடைக்க! இந்த கட்டையை கண்டிப்பாக பயன்படுத்துங்கள்!