திருமண ஆசை காட்டி போலிஸ் உள்ளிட்டவர்களிடம் பணம் சுருட்டல்! முதியவரால் மாட்டிக்கொண்ட இளம்பெண்

0
271
Young girl trapped by old man!! Obscenities are out!!
Young girl trapped by old man!! Obscenities are out!!

திருமண ஆசை காட்டி போலிஸ் உள்ளிட்டவர்களிடம் பணம் சுருட்டல்! முதியவரால் மாட்டிக்கொண்ட இளம்பெண்

திருவனந்தபுரத்தை சேர்ந்த முதியவர் ஒருவர், அவருடைய மனைவி இறந்த பிறகு அவருடைய மாற்றுதிறனாளி மகனை பார்த்துக் கொள்ள முடியாததால் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். அவருக்கு தரகர்களின் மூலம் அஸ்வதியிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அஸ்வதி தனக்கு 40 ஆயிரம் ரூபாய் கடன் இருப்பதாகவும் அதை தருவதாக இருந்தால் தான் திருமணம் செய்துகொள்வதாகவும் கூறியுள்ளார்.

இதை நம்பிய அவர் முதலில் ரூ.25000 ஆயிரத்தை கொடுத்துள்ளார். மீதி தொகையை பிறகு தருவதாக கூறினார். பிறகு திருமணத்தை பதிவு செய்ய  சப்-ரிஜிஸ்தரார் அலுவலகத்திற்கு வந்தபோது  மீதமுள்ள ரூ.15000 ஆயிரத்தை கொடுத்துள்ளார். ஆனால் அன்று இணைய இணைப்பு இல்லாததால் திருமண பதிவு நடைபெறவில்லை.  பிறகு அஷ்வதியை தொடர்பு கொண்டபோது தனக்கு பணம் கிடைக்கவில்லை என கூறி ஏமாற்றியுள்ளார்.

இதனை தொடர்ந்து அந்த முதியவர் அஸ்வதி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் அஸ்வதி கைது செய்யப்பட்டார். கொல்லத்தை சேர்த்த அஸ்வதி, வயதானவர்கள், மனைவியை இழந்தவர்கள் என இவர்களை குறி வைத்து ஆசை வார்த்தைகள் பேசியும், திருமணம் செய்து கொள்வதாக கூறியும் பணம் பறித்துள்ளது தெரிய வந்துள்ளது.

அஸ்வதி கடந்த 5 வருடங்களாக முகநூல் பக்கத்தில் இருந்து, அஸ்வதி அச்சு, அனு, அனுஸ்ரீ பல பெயர்களில், போலி கணக்குகளின் மூலம் சாட்டிங் செய்திருக்கிறார். அதே போல் முகநூல் பக்கத்தில் இருக்கும் அழகான பெண்களின் புகைப்படங்களையும் பயன்படுத்தி உள்ளார். முதலில் நட்பாக பழகி, பிறகு ஆபாச பேச்சுகளில் ஈடுபட்டு, அதை பதிவு செய்து பணம் பறிப்பது தான் அஸ்வதியின் வேலையாக இருந்துள்ளது.

3 வருடங்களுக்கு முன்பாக இவர் மீது கொல்லத்தை சேர்ந்த ஒரு பெண் தன்னுடைய புகைப்படத்தை பயன்படுத்தி உள்ளதாக புகார் அளித்தார். அதே போல் கொல்லம் எஸ்.ஐ. ஒருவரும் அஸ்வதியிடம் ரூ.1 லட்சம் வரை பறிகொடுத்துள்ளதாக புகார் அளித்துள்ளார். பல அரசியல் பிரமுகர்கள் அஸ்வதியின் வலையில் விழுந்துள்ளதாக தெரிகிறது. முதியவர் அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுத்ததால் இவ்வளவு விஷயங்கள் வெளிவந்துள்ளன.

இவரின் வலையில் விழுந்தவர்கள் அனைவரும், வயதானவர்கள், போலீசார், மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகள் என தெரிய வந்துள்ளது. பலரும் வெளியில் தெரிந்தால் அசிங்கமாகிவிடும், வேலைக்கு பிரச்சினை வரும் என புகார் எதையும் அளிக்காமல் இருந்துள்ளனர். அனால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால் அது ரகசியமாக வைக்கப்படும் என காவல்துறை கூறியுள்ளது.

Previous article10 ஆம் வகுப்பு சிறுமியிடம் சில்மிஷம் செய்த 12 ஆம் வகுப்பு மாணவன்!! வினையால் வந்த குழந்தை!!
Next articleவெளிமாநில தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தமிழ் மொழி கற்றுத்தரும் பயிற்சி!