சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர் பகுதியில் நடுப்பட்டி எலத்தூரைச் சார்ந்த பொறியியல் பட்டதாரியான பெண்மணி ஒருவர் செய்த காரியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே பகுதியை சார்ந்தவர் ராஜா. இவரது மகன் கிரிசங்கரும் பொறியியல் பட்டதாரி ஆவார்.
மேலே குறிப்பிடப்பட்ட பொறியியல் பட்டதாரியான இளம்பெண்ணும் கிரிசங்கரும் சில காலங்களாக காதலித்து வந்தனர். இவர்கள் காதலித்து வந்த விஷயம் சமீபத்தில் இரு வீட்டாருக்கும் தெரிய வந்தது. எனவே இவர்களின் காதலுக்கு பெண்வீட்டார் பச்சைக்கொடி காட்டி சம்மதித்தனர். ஆனால் இவர்களின் காதலுக்கும் இவர்களின் திருமணத்திற்கும் காதலன் கிரிசங்கரின் வீட்டிலிருந்து சம்மதம் தெரிவிக்கவில்லை.
இதனால் காதலன் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, பெண்ணை திருமணம் செய்து கொள்ள கோரி காதலனின் இல்லத்திற்கு முன்னதாக தர்ணா போராட்டம் நடத்தியுள்ளார்.ஆனால் இதனை காதலன் கிரிசங்கர் வீட்டார் சிறிதளவும் மதிக்காமல் அவர்கள் போக்கில் கண்டுகொள்லாமல் இருந்தனர்.
இதனையடுத்து ஆத்திரமடைந்த பெண்மணி அங்குள்ள காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து கிரிசங்கர், அவரது தாய் மற்றும் தந்தையை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
தன் காதலை ஏற்காத குடும்பத்தினருக்கு இப்பெண் தக்க பதிலடி கொடுத்துள்ளதாக அக்கம்பக்கத்தில் பாராட்டினர். இப்பெண்ணின் செயல் சற்று வியப்பாக இருந்தாலும் இனி வரும் பெண்கள் இம்மாதிரியான சூழ்நிலையில் தற்கொலை போன்ற மூடத்தனமான செயல்களில் ஈடுபடாமல் தைரியத்துடன் போராட வேண்டும்.இதற்கு இப்பெண்மணி ஒரு எடுத்துக்காட்டு ஆவார்.
Home District News காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காதலன் வீட்டாருக்கு இளம்பெண் செய்த காரியம் தெரியுமா?