உயிரிழந்த காதலி.. உடலுக்கு தாலி கட்டி மனைவியாக்கிய இளைஞர்.. அசாமில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!

Photo of author

By Janani

இளைஞர் உயிரிழந்த காதலியை திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

காதலர்கள் அனைவரும் தாங்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என விரும்புவார்கள். அவர்களின் மிகப்பெரிய விருப்பமே திருமணம் தான் ஆனால், அது சிலருக்கே கைகூடும். அப்படி கை கூடுபவர்கள் பாக்கியசாலிகளாக கருதப்படுவர்.இப்படி இருக்கையில், இறந்த காதலியை ஒருவர் திருமணம் செய்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.

அசாமை சேர்ந்தவர் பிதுவன் தாமுலி. இவர் பிராத்தனா போரா என்பவரை உயிருக்கு உயிராக காதலித்து வந்தார்.இருவருக்கும் அவரது குடும்பத்தினர் அவர்களுக்கு திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால், பிராத்தனாவிற்கு திடீரென உடல்நல கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பல நாள் சிகிச்சை அளித்தும் அவர் உடல்நலம் சரியாகாததோடு நாளுக்கு நாள் மோசமடைந்தது. இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்கு உயிராக காதலித்த காதலி உலகில் இல்லாததை ஏற்று கொள்ள முடியாத அவர் கதறி அழுத சம்பவம் காண்போரை கலங்க செய்தது.

அவரை சமாதானம்படுத்தி அழைத்து வந்த போது காதலியின் உடலுக்கு தாலி கட்டிய அவர் உன்னை தவிர வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் எனவும் காதலியின் உடலின் முன் சத்தியம் செய்தார்.

இதுகுறித்து அவரது உறவினர்கள் தெரிவிக்கையில், இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்து வந்த போது பிராத்தனா திடீரென உடல்நல கோளாறால் அவதிப்பட்டார்.எவ்வளவு முயன்றும் மரூத்துவர்களால் அவரை காப்பாற்ற முடியவைல்லை என கூறி கண்ணீர் வடித்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் நெகிழ்ச்சியில் ஏற்படுத்தியுள்ளது.