மனித தலையைத் தின்ற இளைஞர் மற்றும் இளம்பெண்! ஆந்திராவில் அதிர்ச்சித் தகவல்!

Photo of author

By Kowsalya

மனித தலையைத் தின்ற இளைஞர் மற்றும் இளம்பெண்! ஆந்திராவில் அதிர்ச்சித் தகவல்!

மனித தலையை அடுப்பில் சுட்டு தின்ற இளம் பெண் மற்றும் இளைஞர் கைது ஆந்திராவில் பரபரப்பு.

ஆந்திராவில் விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள ரெல்லி என்ற சாலையில் வசித்து வருபவர் சுப்ரமணியம்.இவர் தனது வீட்டின் அருகே ஒரு கோணிப்பை கிடந்துள்ளது. அது என்னவென்று பார்ப்பதற்க்கு முயற்சி செய்த அவர் எடுத்துப் பார்த்த பொழுது மிகவும் அதிர்ச்சியுற்று இருக்கிறார். அதில் மனித தலை ஒன்று இருந்தது இருக்கிறது. அது எங்கிருந்து வந்தது என்று அவருக்குத் தெரியவில்லை? அதிர்ச்சி அடைந்த அவர் தன் வீட்டிற்கு உள்ளே சென்றுவிட்டார். ஆனால் யார் அதை எடுக்கிறார்கள்? என்று கண்காணித்து வந்திருக்கின்றார்.

கவனித்து வந்த சுப்பிரமணியன் அப்பொழுது தன் வீட்டில் அருகே உள்ள பாழடைந்த வீட்டிலிருந்து ராஜு என்பவர் அந்த கோணிப் பையை எடுத்து செல்வதை பார்த்து உள்ளார்.

சிறிது நேரம் கழித்து சுப்பிரமணியம் அந்த வீட்டின் பக்கம் சென்று ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த உள்ளார். அப்பொழுது அங்கு நடந்த சம்பவத்தை கண்டு மிகவும் அதிர்ச்சியுற்று இருக்கிறார். அங்கு பார்த்த பொழுது அந்த மனித தலையை ராஜு என்ற இளைஞனும் ஒரு இளம்பெண்ணும் சுட்டு சாப்பிட்டு கொண்டிருப்பதை பார்த்து அதிர்ந்து உள்ளார்.

பயந்துபோன சுப்பிரமணியம் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளார். உடனே அங்கு விரைந்து வந்த போலீசார் ராஜு என்ற இளைஞனையும் அந்த இளம் பெண்ணையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு நடத்தி வருகின்றனர்.

போலீஸ் விசாரணையின்போது ராஜுவின் தந்தை ஐந்து வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டதாகவும், அதே நேரத்தில் ராஜு சிறு சிறு திருட்டு வேலைகளை செய்யும் நபர் எனவும் மற்றும் போதைக்கு மிகவும் அடிமையானவர் என்றும் பல தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் அந்த தலை எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? மயானத்திலிருந்து கொண்டு வந்ததா? அல்லது கொன்று எடுத்து வந்தார்களா? என்ற தோரணையில் விசாரணை நடந்து வருகிறது.