இளநரை? இதை நிரந்தர கருப்பாக்கும் ஜீரோ பைசா செலவில்லாத ஆர்கானிக் ஹேர் டை வீட்டிலேயே தயார் செய்யலாம்!

Photo of author

By Divya

இளநரை? இதை நிரந்தர கருப்பாக்கும் ஜீரோ பைசா செலவில்லாத ஆர்கானிக் ஹேர் டை வீட்டிலேயே தயார் செய்யலாம்!

Divya

Updated on:

இளநரை? இதை நிரந்தர கருப்பாக்கும் ஜீரோ பைசா செலவில்லாத ஆர்கானிக் ஹேர் டை வீட்டிலேயே தயார் செய்யலாம்!

இன்றைய இளம் தலைமுறையை பெருமளவு பாதிக்கும் இள நரையை நிரந்தமாக கருமையாக்க ஆர்கானிக் டை இனி வீட்டிலேயே தயார் செய்து பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்:-

1)மருதாணி பொடி
2)அவுரி பொடி
3)எலுமிச்சை சாறு
4)டீ தூள் சாறு

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். பிறகு அதில் 1 தேக்கரண்டி டீ தூள் கொதிக்க விடவும்.

அடுத்து ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி அவுரி பொடி, 2 தேக்கரண்டி மருதாணி பொடி சேர்த்து நன்கு கலந்து விடவும்.

பிறகு அதில் டீ தூள் தண்ணீரை வடிகட்டி சேர்த்து கலக்கவும். பின்னர் அதில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து விடவும். இந்த கலவையை ஒரு இரவு வரை ஊறவிடவும்.

மறுநாள் இந்த ஆர்கானிக் ஹேர் டையை தலை முழுவதும் அப்ளை செய்து 1 மணி நேரத்திற்கு ஊற விட்டு ஷாம்பு பயன்படுத்தாமல் தலையை நன்கு அலசி சுத்தம் செய்யவும்.

இரண்டு நாட்கள் கழித்து நீங்கள் தலைக்கு உபயோகிக்கும் ஷாம்பு பயன்படுத்தி கூந்தலை அலசிக் கொள்ளவும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்து வந்தால் இளநரை அனைத்தும் நிரந்தமாக கருமையாகும். இந்த ஆர்கானிக் டையால் பக்க விளைவுகள் ஏதும் ஏற்படாது.