உங்கள் கடனும் தீர்ந்து போகும்.. இந்த பரிகாரத்தை செய்தால்..!

Photo of author

By Divya

உங்கள் கடனும் தீர்ந்து போகும்.. இந்த பரிகாரத்தை செய்தால்..!

வாழ்வில் கடன் பிரச்சனை பெரும் பிரச்சனையாக இருக்கின்றது. யாரும் ஆசைப்பட்டு கடன் வாங்குவதில்லை. எதிர்பாராத சூழலால் தான் கடனில் சிக்கி விடுகின்றனர். இந்த கடனை அடைக்க எவ்வளவு போராடினாலும் அனைத்தும் தோல்வியில் தான் முடிகிறது.

சம்பாதிக்கும் பணம் வீட்டு செலவிற்கே சரியாக இருப்பதினால் கடனை அடைக்க பணத்தை சேமிக்க முடிவதில்லை. இந்த கடன் பிரச்சனை அனைத்தும் தீர்ந்து போக’தெய்வத்தின் அருள் நிச்சயம் நமக்கு இருக்க வேண்டும்.

கடன் தீர வேண்டும் என்றால் நமக்கு மகா லட்சுமி தாயாரின் அருள் நிச்சயம் இருக்க வேண்டும். கடன் தீர்ந்து பணத்தை ஈர்த்து கொடுக்கும் சக்தி மகா லட்சுமி தாயாருக்கு இருக்கின்றது.

பரிகாரம்…

இந்த பரிகாரத்தை வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை அன்று செய்தால் விரைவில் பலன் கிடைக்கும்.

நீங்கள் எந்த கிழமையில் பரிகாரம் செய்ய விரும்புகிறீர்களோ அந்த நாளில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து தலைக்கு குளித்து விட்டு மகா லட்சுமி தாயாரை மலர்களால் அலங்கரிக்கவும். பின்னர் ஒரு நெய் தீபத்தை போட்டு ஏலக்காய் பாலை நெய்வேத்தியமாக லட்சுமி தாயாருக்கு படைக்கவும்.

அடுத்து மனதை ஒரே சேர கொண்டு வந்து “ஓம் மகாலட்சுமியே நமஹ” என்ற மந்திரத்தை 108 முறை வாய்விட்டு உச்சரிக்கவும். இந்த வழிபாட்டை வாரம் ஒருமுறை செய்து வந்தால் நிச்சயம் மகா லட்சுமி அருள் கிடைத்து கடன் அடைய வழி பிறக்கும்.