நில மோசடி வழக்கில் வாலிபர் கைது!!  போலீசார் அதிரடி நடவடிக்கை!!

Photo of author

By CineDesk

நில மோசடி வழக்கில் வாலிபர் கைது!!  போலீசார் அதிரடி நடவடிக்கை!!

CineDesk

Updated on:

நில மோசடி வழக்கில் வாலிபர் கைது!!  போலீசார் அதிரடி நடவடிக்கை!!

சென்னை மாவட்டம் அண்ணாநகர் மேற்கு காலனியில் வசித்து வருபவர் கோபாலகிருஷ்ணன். இவர் கடந்த 1983 –ஆம் ஆண்டு சிவப்பிரகாசம் என்பவரிடமிருந்து 2,400 சதுர அடி உடைய இரண்டு இடத்தை திருநின்றவூர் லட்சுமி பிரகாஷ் நகரில் வாங்கி உள்ளார்.

பூந்தமல்லி சார்பதிவாளர் அலுவலகத்தில் இதற்கான பத்திரப்பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இவர் கடந்த 2018 –ஆம் ஆண்டு வரையிலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையான வில்லங்க சான்றிதழை போட்டு வந்துள்ளார்.

ஆனால் 2021 –ஆம் ஆண்டு போடப்பட்ட வில்லங்க சான்றிதழில் இந்த இடம் சரத்பாபு மற்றும் மோகன் ஆகியோரது பெயரில் பதிவாகி இருந்தது தெரிய வந்தது. இதை அறிந்த கோபாலகிருஷ்ணன் அதிர்ச்சி அடைந்தார்.

இதில் சரத்பாபு பெயரில் இருந்த நிலம் துக்சந்த் பாகுமார் என்பவருக்கு இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் விற்பனை செய்யப்பட்டு மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இந்த புகாரை பற்றி விசாரணை நடத்திய நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் மோகனும், சரத்பாபுவும் போலி ஆவணங்களை உருவாக்கி நில மோசடி செய்தனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அறிந்த போலீசார் அதிரடியாக சரத்பாபுவை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இது அறிந்து தலைமறைவான மோகனை காவல் துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.

இது போன்ற நில அபகரிப்பு குற்றங்கள் அதிகமாகிக்கொண்டே இருப்பதால் மக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறது.