காதலியை கொடூரமாக தாக்கிய இளைஞர்.. சமூகவலைதளங்களில் வைரலாகும் வீடியோ…!

0
181

நடுரோட்டில் காதலியை தாக்கிய இளைஞரை காவல்துறையினர்  கைது செய்தனர்.

மத்தியபிரதேச மாநிலம், ரேவா மாவட்டத்தில் நடுரோட்டில் தனது காதலியை சரமாரியாக தாக்கி மயங்கிய அவரை அப்படியே விட்டு சென்ற வீடியோ சமூகவலைதளங்களில் அந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். கடந்த 21ம் தேதி அந்த பெண்ணும் இளைஞரும் நடுரோட்டில் பேசி கொண்டிருந்தனர்.

அப்போது அந்த பெண்ணை தாக்க ஆரம்பித்தவர் அவரை சரமாரியாக தாக்கியதோடு எட்டி உதைத்தார். அப்போது அந்த பெண் மயக்கமடையவே அந்த பெண்ணை எட்டி உதைத்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இதனை வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் பதிவேற்றியுள்ளனர்.இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.

इस राक्षस के ऊपर अब धारा बढ़ा दी गई हैं. पहले 151 तहत केस दर्ज था। लड़की के परिजनों ने केस दर्ज करवाने से मना कर दिया था। अब इसके ऊपर सुसंगत धारा में केस दर्ज कर लिया गया है। मामला मध्यप्रदेश के रीवा का है।@ChouhanShivraj @drnarottammisra @SP_Rewa pic.twitter.com/o2SjBIZsaw
— Shubham shukla (@ShubhamShuklaMP) December 24, 2022

நீண்ட நேரமாக அந்த பெண் சாலையில் கிடந்ததை கண்டு கிராம மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து இந்திய தண்டனை சட்டம் பிரிவு 151ன் கீழ் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அந்த இளைஞரையும் அவரின் நண்பர்களையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleவாரிசு படத்தின் ஆடியோ லான்ச்சில் தனது Girlfriend குறித்து பேசிய தளபதி விஜய் ! வேறு எதை பற்றியெல்லாம் பேசினார் ?
Next articleஎஸ்பிஐ-ன் அதிரடி திட்டம்: இனி குழந்தைகளின் படிப்பு முதல் திருமணம் வரையுள்ள செலவுகள் இலவசம்!