8 மாதத்தில் கசந்த காதல் திருமணம்.. இளைஞர் தற்கொலை.. சென்னையில் நடந்த சோகம்..!

0
216

திருமணமான 8 மாதத்தில் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, மணலியை சேர்ந்தவர் ராஜன் (22). இவர் புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்ற இளம்பெண்ணை காதலித்து வந்தார். இந்நிலையில், இருவீட்டார் சம்மதத்துடன் 8 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆன சில நாட்களிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுப்பாடு ஏற்பட்டது.

இதனால்,ராஜேஸ்வரி கணவரை விட்டு பிரிந்து தாய் வீட்டிற்கு சென்று விட்டார். ராஜன் தனது தாயுடன் வசித்து வந்தார். சம்பவதன்று, அவர் தனது மனைவியுடன் பேசிவிட்டு தூங்க சென்றார். இந்நிலையில், காலையில் எழுந்த அவர் வீட்டின் சமையலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்றதால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. உங்களுக்கு தற்கொலை எண்ணம் தோன்றினால் அருகில் உள்ளவர்களிடம் உடனடியாக பேசுங்கள். அல்லது 104 என்ற எண்ணுக்கு அழைத்து மனதில் உள்ளவற்றை பகிர்ந்து கொள்ளாலாம்.

Previous articleஇடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு! எந்தெந்த பகுதிகளில் தெரியுமா வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!
Next articleசபரிமலை செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு! முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது!