சாலை விபத்தில் பலியான நண்பன்.. குற்ற உணர்வில் இளைஞர் செய்த விபரீத செயல்..!

0
187

தன்னுடன் இருசக்கர வாகனத்தில் தன்னுடன் வந்த நண்பர் பலியானதால் இளைஞர் குற்ற உணர்ச்சியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் அங்குள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன் தினம் அவர் தனது நண்பரான பிரபு என்பவருடன் இருசக்கர வாகனத்தில் செஞ்சியில் இருந்து அங்கராயநல்லூர் சென்று கொண்டிருந்தார். அப்போது பிரபு இரு சக்கர வாகனத்தை ஓட்டினார். அப்போது, எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்தது.

இதில், இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த சீனிவாசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார், படுகாயமடைந்த பிரபுவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், தன்னால் தான் நண்பர் இறந்தார் என்ற மன உளைச்சலில் இருந்தார் என கூறப்படுகிறது. இதற்கிடையில் அவர் கூர்மையான இரும்பு ஆயுதத்தால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவமனை பணியாளர்கள் அவரை காப்பாற்றி சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.

சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவர் யாருடனும் பேசாமல் தனியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில், சம்பவதன்று அவரது வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் தூங்கிய பின் தற்கொலை செய்து கொண்டார். மகனை காணாமல் தேடிய பெற்றோர் அவர் மரத்தில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous article7 நாளில் வெண்புள்ளி மறைய வீட்டு வைத்தியம்!
Next articleகாதலனுடன் உல்லாசமாக வாழ பெற்ற மகளை பலியாக்கிய தாய்.. மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்..!