இளம் வீரருக்கு அன்பு கட்டளை விதித்த யுவராஜ் சிங்

0
180
இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் சவுத்தாம்ப்டனில்  இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட் வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ராவும் வாழ்த்து தெரிவித்திருந்தார். தனது டுவிட்டர் பக்கத்தில் ‘குறிப்பிடத்தகுந்த சாதனைக்கு வாழ்த்துக்கள். உங்களுடைய ஆர்வம், வலிமை மற்றும் இயக்கம் விதிவிலக்கானவை. உங்களுடைய எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள்’’ எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங் பும்ராவிற்கு‘ நீங்கள் குறைந்தபட்சம்  400 விக்கெட் வீழ்த்த வேண்டும் என்று அன்பு கட்டளை விடுத்துள்ளார்.
Previous articleஆஸ்திரேலிய நபருக்கு அதிகபட்ச தண்டனையை கொடுத்த நியூசிலாந்து
Next articleஅரையிறுதியில் இருந்து விலகுகிறாரா இந்த வீராங்கனை?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here