உலகில் பல நாடுகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்!!! விநாயகரை வழிபடும் வெளிநாட்டு இந்தியர்கள்!!! 

0
66
#image_title

உலகில் பல நாடுகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்!!! விநாயகரை வழிபடும் வெளிநாட்டு இந்தியர்கள்!!!

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவது போலவே இந்தியாவிலும் பல மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. இதே போல உலகம் முழுவதிலும் பல நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடி விநாயகரை வழிபட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

உலகம் முழுவதும் உள்ள மக்களால் வழிபடும் கடவுளாக விநாயகர் இருக்கின்றார். இது வரலாறு ஆகும். ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளில் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அந்த நாடுகளில் ஹிந்து பண்டிகையான விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கமாக இருந்து வருகின்றது.

அந்த வகையில் பல வெளிநாடுகளில் வாழும் இந்தியாவை சேர்ந்த மக்கள் விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு விநாயகரை வழிபட்டு வருகின்றனர். மேலும் உள்ளூரில் வசிக்கும் மக்களும் விநாயகரை கையெடுத்து கும்பிட்டு வழிபாடு நடத்தினர்.

இதையடுத்து ஜப்பானில் இருக்கும் நூற்றுக் கணக்கான மக்கள் ஒன்றாக கூடி விநாயகரை வழிபட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஜப்பான் மட்டுமில்லாமல் மற்ற நாடுகளிலும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.