அடடே தமிழக முதல்வருக்கு இப்படி பட்ட மனசா.!! ஸ்டாலினை பாராட்டும் மக்கள்.!!

0
72

தமிழக முதல்வர் மற்றும் முக்கிய தலைவர்களுக்கு விரைவாகவும், பாதுகாப்பாகவும் செல்வதற்காக அவர்களது வாகனத்தின் முன்பும் பின்பும் கான்வாய் எனப்படும் பாதுகாப்பு வாகனங்கள் செல்வது வழக்கம்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் இருந்து தினமும் தலைமைச் செயலகத்திற்கு சென்று வருகிறார். முதல்வரின் வாகனம் செல்லும் நேரங்களில் அப்பகுதியில் போக்குவரத்து சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டு முதல்வரின் வாகனங்கள் சென்ற பிறகு மீண்டும் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும்.

இந்நிலையில், மக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க முதல்வரின் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை 14 இல் இருந்து 7 ஆக குறைக்கப்பட்டுள்ளது. முதல்வர் வருவதற்கு முன்பே சில நிமிடங்கள் போக்குவரத்து சிக்னலில் வாகனங்கள் நிறுத்தப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. இனி எந்த இடர்பாடும் நடைமுறையில் இருக்காது.

பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், ஆவின்பால் குறைப்பு போன்ற பல்வேறு அதிரடி அறிவிப்புகளை அறிவித்த தமிழக முதல்வர். தற்போது மக்களின் நலனுக்காக இந்த முடிவை எடுத்துள்ளார். ஏற்கனவே, முதல்வரின் வாகனம் செல்லும் வழி நெடுக பாதுகாப்புக்காக காவலர்கள் நிற்க வைக்கப்படுவது வழக்கமாக இருந்த நிலையில், அதில் பெண் காவலர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது