10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மாதத்தில் பொதுத்தேர்வு-அமைச்சர் மகேஷ் தகவல்.!!

0
170

தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் மாதத்திலும், பொதுத்தேர்வு மார்ச் மாதத்திலும் நடத்த திட்டமிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

திருச்சியில் சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக பெண் குழந்தைகள் தினம் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளி மாணவர்களுடன் பேசினார்.

அப்போது ஒரு மாணவி இந்த ஆண்டு பொதுத் தேர்வு நடத்தப்படுமா என்று அமைச்சரிடம் கேள்வி கேட்டார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு டிசம்பர் மாதத்திலும், பொதுத் தேர்வை டிசம்பர் மாதத்திலும் நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.

மேலும், தமிழக முதல்வரின் அனுமதி பெற்று இதற்கான சுற்றறிக்கைகள் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, மற்றொரு மாணவி பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் ஆல்பாஸ் என்று போடப்பட்டுள்ளது. இதனால் எங்களது உயர்கல்வி படிப்பதற்கு பாதிப்பு ஏற்படுமா.? என்று ஒரு மாணவி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு உள்ளது. எனவே, மாணவர்களின் நலன் கருதி பொதுத்தேர்வு வைக்காமல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.