உரை மோர் இல்லாமல்.. கமகம கெட்டி தயிர் செய்யலாம்!

0
325
#image_title

உரை மோர் இல்லாமல்.. கமகம கெட்டி தயிர் செய்யலாம்!

தயிர் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த பொருள். குளிர்ச்சி தன்மை கொண்ட இந்த தயிர் அல்சர், வாய்ப்புண், குடல் புண், உடல் உஷ்ணம், பொடுகு உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருக்கின்றது.

இந்த உரை மோர் இல்லாமல் பாலில் தயிர் போடுவது குறித்த சிம்பிள் ட்ரிக்ஸ் இதோ…

தேவையான பொருட்கள்…

*பால்
*பச்சை மிளகாய்

செய்முறை…

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கப் பால் ஊற்றி கொதிக்க வைக்கவும்.

பால் அடிபிடிக்காமல், பாலாடை வராமல் கரண்டியால் கிளறி விடவும்.

பிறகு அடுப்பை அணைத்து பால் வெது வெதுப்பான சூட்டிற்கு வந்ததும் அதில் 2 பச்சை மிளகாய் காம்புடன் சேர்த்து போட்டு மூடி வைக்கவும்.

8 மணி நேரத்திற்கு பிறகு தயிராகி விடும். உரை மோர் இல்லாதவர்கள் இந்த முறையில் தயிர் செய்யலாம்.

தேவையான பொருட்கள்…

*பால்
*எலுமிச்சை சாறு

செய்முறை…

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கப் பால் ஊற்றி கொதிக்க வைக்கவும்.

பால் அடிபிடிக்காமல், பாலாடை வராமல் கரண்டியால் கிளறி விடவும்.

பிறகு அடுப்பை அணைத்து பால் வெது வெதுப்பான சூட்டிற்கு வந்ததும் அதில் 2 சொட்டு எலுமிச்சை சாறு சேர்த்து போட்டு மூடி வைக்கவும்.

8 மணி நேரத்திற்கு பிறகு தயிராகி விடும். உரை மோர் இல்லாதவர்கள் இந்த முறையில் தயிர் செய்யலாம்.

தேவையான பொருட்கள்…

*பால்
*வர மிளகாய்

செய்முறை…

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கப் பால் ஊற்றி கொதிக்க வைக்கவும்.

பால் அடிபிடிக்காமல், பாலாடை வராமல் கரண்டியால் கிளறி விடவும்.

பிறகு அடுப்பை அணைத்து பால் வெது வெதுப்பான சூட்டிற்கு வந்ததும் அதில் 2 வர மிளகாய் காம்புடன் சேர்த்து போட்டு மூடி வைக்கவும்.