காது வலி, காது புண் மற்றும் எரிச்சலை போக்க 4 பொருள் போதும்!

Photo of author

By Kowsalya

காதுவலி,காது புண்,எரிச்சல் மற்றும் கேட்கும் திறன் குறைவாக உள்ளதை சரி செய்யும் இந்த 4 பொருள் போதும், இதை தொடர்ந்து உண்டு வர காது சமந்தமான பிரச்சனைக்கு தீர்வு உண்டு.

 

தேவையான பொருட்கள்:

 

1. நல்லெண்ணெய் – 50மி

2. நொச்சி இலை – 5 கிராம்

3. வெள்ளை மலை பூண்டு – 5

4. வலம் புரிகாய்+இடம் புரிக்காய் – தலா 5 எண்ணிக்கை

 

செய்முறை:

 

1. இந்த பொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அதனை வாங்கி சுத்த படுத்தி கொள்ளவும்.

2. அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைத்து வைத்து கொள்ளவும்.

3. ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து அரைத்து வைத்த அனைத்தையும் ஒன்றாக சேர்த்து சுண்ட வைக்கவும்.

4. சுண்டிய பிறகு ஆறவைத்து வடிகட்டி கொள்ளுங்கள்

5. இத்தனை தினமும் உறங்க செல்லும் முன்பு காதில் 3 சொட்டு அளவு விட்டு கொண்டு ஒரு 15 நிமிடங்கள் ஓய்வு கொடுக்கவும். எந்த வேலையும் செய்ய வேண்டாம்.

6. இவ்வாறு தொடர்ந்து 7 நாட்கள் வரை செய்தால் போதும், ஒரு எண்ணெய் போதும் இரைச்சல், சீல் வடிதல்,கேட்கும் திறன் குறைவு, காதுவலி, என அனைத்தும் நீங்கும்.

குறிப்பு: 10 வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு பயன்படுத்தலாம்.