மன அழுத்தம் ஏற்பட காரணம் என்ன?..அதன் முக்கிய காரணங்கள் இதோ தெரிஞ்சுக்கோங்க!!

0
95

மன அழுத்தம் ஏற்பட காரணம் என்ன?..அதன் முக்கிய காரணங்கள் இதோ தெரிஞ்சுக்கோங்க!!

ஒருவர் தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களால் அழுத்தத்தை உணரும்போது அவருடைய உடலில் சில மாற்றங்கள் ஏற்படும்.இந்த மாற்றம் அந்தச் சூழ்நிலையை மேற்கொள்ள அவருக்கு மேலும் சக்தியையும் வலிமையையும் கொடுக்கும்.இந்த அதிகப்படியான சக்தியும் வலிமையும் அவருக்கு மிக உதவியாக இருக்கும்.ஆனால் இந்த சூழ்நிலை அடிக்கடி அல்லது தொடர்ந்து நீடிக்குமானால் அது மன அழுத்தமாக மாறிவிடும்.
தன்னை ஏதாவது உடல்ரீதியாக தாக்கும் என ஒரு நபர் பயந்தால் உடல் உடனடியாக அதிகபட்ச ஆற்றலை தந்து அச்சூழ்நிலையில் தன்னைக் காத்துக்கொள்ள அல்லது தப்பிச்செல்ல உதவுகிறது.
இதனால் மக்கள் தாங்களாகவே அழுத்தத்தை உண்டாக்கி கொள்கிறார்கள்.

நம்மால் கட்டுப்படுத்த முடியாத ஒன்றை பற்றி கவலைகளை வளர்த்துக் கொள்ளும் போது இது ஏற்படுகிறது. சிலர் இவ்வகை வாழ்நிலைக்கு பழகிவிடுகிறார்கள். அவர்கள் மேலும் அழுத்தமான சூழ்நிலைகளை விரும்பி ஏற்கிறார்கள்.சத்தம் கூட்டம் வேலை அல்லது குடும்ப சுமை போன்ற காரணிகளால் ஏற்படும் அழுத்தம் ஆகும்.அழுத்தம் ஏற்படுத்தும் சூழல் காரணிகளை அறிந்து அவற்றை தவிர்ப்பதன் மூலம் அழுத்த அளவை குறைக்கலாம்.அதிக நாட்களின் சுமை காரணமாக ஏற்படும் இவ்வகை அழுத்தத்தால் அதிக உடல் பாதிப்புகள் ஏற்படும். வீடு அல்லது பள்ளியில் அதிக அல்லது கடினமான வேலையை செய்வதால் இது ஏற்படுகிறது.ஓய்வு மற்றும் பொழுதுபோக்குக்கு நேரத்தை சரியாக திட்டமிட்டு செயல்படாததாலும் இது ஏற்படும். பலர் இதனை கட்டுப்படுத்துவது சிரமம் என்று நினைப்பதால் இதுவே மிக கடுமையான அழுத்தமாக கருதப்படுகிறது. இந்நிலையில்
மருத்துவரை உடனடியாக அணுகவும்.  அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுவது நல்லது.

author avatar
Parthipan K