கார் மீது மோதிய டிப்பர் லாரி!! 2 குழந்தைகள் உட்பட மூவருக்கு ஏற்பட்ட சோக முடிவு!! 

கார் மீது மோதிய டிப்பர் லாரி!! 2 குழந்தைகள் உட்பட மூவருக்கு ஏற்பட்ட சோக முடிவு!! 

கடலூரில் கார் மீது டிப்பர் லாரி மோதியதில் இரு குழந்தைகள் உட்பட மூவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

நாகபட்டினம்  மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடியை அடுத்த கீழ்பெரும்பள்ளம் அருகே  மேட்டுத் தெருவில் வசித்து வருபவர்  சத்தியசீலன் வயது 38. இவர் சொந்த கார் வைத்து டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் அவர் சென்னையில் இருந்து ஒரு குடும்பத்தை சேர்ந்த 5 பேரை ஏற்றிக்கொண்டு சீர்காழி அடுத்த அக்கரைப்பேட்டைக்கு நேற்று இரவு கிளம்பி உள்ளார். அந்த காரானது  சிதம்பரம் அடுத்த கொத்தட்டை மெயின் ரோட்டில் சென்ற போது, எதிரில் வந்த டிப்பர் லாரி கார் மீது மோதியது.

இந்த விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே சத்தியசீலன் உயிரிழந்தார். காரில் வந்த 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அந்த வழியே சென்றவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் விக்ராந்த் வயது 6, மற்றும் நிகல்யா வயது 3, ஆகிய 2 குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த மற்ற 3 பேருக்கும் மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் விபத்தை ஏற்படுத்திய லாரியை சிதம்பரம் போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த விபத்து குறித்து புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் வினதா தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.