பல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன அதிர்ஷ்டம் தெரியுமா??

0
315
#image_title

பல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன அதிர்ஷ்டம் தெரியுமா??

நம் உடலில் பல்லி எந்தெந்த பாகத்தில் விழுந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவில் காணலாம்.

பல்லி விழுவதால் ஏற்படும் பலன்கள்:

* பல்லி நம் தலையில் விழாமல் தலை முடியில் விழுந்தால் நமக்கு ஏதேனும் ஒரு வகையில் நன்மை கிடைக்கப் போகிறது என்பது அர்த்தம்.

* பல்லி நமது முகத்தில் விழுந்தால் நமது வீட்டிற்கு சொந்தக்காரர்கள் அதாவது உறவினர்கள் வருவார்கள்.

* புருவத்தில் பல்லி விழுந்தால் ராஜபதவியில் இருப்பவர்களிடம் இருந்து நமக்கு உதவி கிடைக்கும்.

* கண்ணத்தில் அல்லது கண்களில் பல்லி விழுந்தால் ஏதோ ஒன்றிற்காக நீங்கள் தண்டனை பெறுவீர்கள் அல்லது தண்டிக்கப்படுவீர்கள்.

* இடது கை அல்லது இடது காலில் பல்லி விழுந்தால் அன்றைய நாள் முழுவது நீங்கள் மகிழிச்சியில் இருப்பீர்கள்.

* வலது கை அல்லது வலது காலில் பல்லி விழுந்தால் உங்களுக்கு ஏதேனும் உடல் நலக் கோளாறுகள் ஏற்படும்.

* பாதத்தில் பல்லி விழுந்தால் விரைவில் நீங்கள் வெளிநாடு பயணம் செல்வீர்கள்.

* தொப்புள் பகுதியில் பல்லி விழுந்தால் விலை மதிப்பு மிக்க வையங்கள் இரத்தின கற்கள் போன்ற பொருட்கள் உங்களுக்கு கிடைக்கும்.

* தொடையில் பல்லி விழுந்தால் உங்களது பெற்றோர்களுக்கு நீங்கள் வருத்தத்தை ஏற்படுத்துவீர்கள்

* இடது பக்க மார்பில் பல்லி விழுந்தால் சுகமும், வலது பக்க மார்பில் பல்லி விழுந்தால் இலாபமும் கிடைக்கும்.

* கழுத்துப் பகுதியின் இடது பக்கத்தில் பல்லி விழுந்தால் நீங்கள் செய்யக்கூடிய காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

* கழுத்துப் பகுதியின் வலது பக்கத்தில் பல்லி விழுந்தால் வேறு ஒருவருடன் பகை உண்டாகும்.