பிரசவத்தை உறுதி செய்ய சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!! தொடர்ந்து நிகழும் பிரசவ இழப்புகள் அதிர்ச்சி தரும் தகவல் !!
குன்னூரில் தனியார் மருத்துவமனையில் பிரசவத்தை உறுதி செய்யச் சென்ற பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே நிஷாந்த் மற்றும் அவரின் மனைவி ஹரிப்பிரியா ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ஹரிப்ரியா கர்ப்பம் தரித்ததாக சொல்லப்படுகிறது. எனவே அவர் அதை உறுதி செய்துக் கொள்ள விரும்பினார்.
இதனால் ஹரிப்பிரியா 5 வாரங்கள் கர்ப்பமாக உள்ள நிலையில் கர்ப்பத்தை உறுதி செய்து கொள்ள குன்னூர் 5 சாலையில் உள்ள ஒரு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு சில பரிசோதனைகள் செய்ய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டு மேலும் சில காரணங்களுக்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த சூழ்நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஹரிப்ரியா திடீரென சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.உடனடியாக இந்த சம்பவம் குறித்து கோத்தகிரி காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது.
பின்னர் இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஹரிபிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் கோட்டாட்சியர் ஆகியோர் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சமீப காலமாக பிரசவ உயிரிழப்புகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதனை தவிர்க்க சில கட்டுபாடுகளை அரசு விதிக்காவிடில் வரும் காலங்களில் இன்னும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. எனவே அரசு இதற்கு சில கடுமையான கட்டுபாடுகள் அமல் படுத்தினால் தான் இந்த மரணங்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும்.