தினமும் ஒரு செவ்வாழை பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் 10 நன்மைகள்!!

0
62
#image_title

தினமும் ஒரு செவ்வாழை பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் 10 நன்மைகள்!!

மனித உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் மிகவும் அவசியம் ஆகும்.இதற்காக பழங்கள்,காய்கறிகள் உள்ளிட்டவற்றை அதிகளவில் எடுத்து கொள்வது உடலுக்கு பல்வேறு நன்மைகள் விலை மலிவான இந்த பழம் நமது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான ஒன்று.இதில் கற்பூரவள்ளி வாழை,மொந்தன்,பச்சை வாழை,ரஸ்தாலி,பூவன்,செவ்வாழை,நேந்திரன் என்று பல வகைகள் இருக்கிறது.

இந்த வாழை வகைகளில் அதிகளவு மருத்துவ குணம் நிறைந்த பழம் செவ்வாழை.இதில்
பொட்டாசியம்,கால்சியம்,வைட்டமின் சி,பாஸ்பரஸ்,அயர்ன்,மக்னீஷியம்,ஃபோலிக் ஆசிட்,உயிர்ச்சத்து,சுண்ணாம்புசத்து மற்றும் தாது உப்புகள் நிறைந்து இருக்கிறது.இதை தினமும் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு பல வித நன்மைகள் கிடைக்கும்.

தினமும் ஒரு செவ்வாழை பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் 10 நன்மைகள்:-

*தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகளவில் கிடைக்கும்.

*மலசிக்கல் பாதிப்பால் அவதிப்படும் நபர்கள் இந்த செவ்வாழை பழத்தை உண்டால் நீண்ட நாட்களாக உடலில் அடைபட்டு கிடந்த மலம் உடனடியாக வெளியேறி விடும்.

*கண் சம்மந்தப்பட்ட பாதிப்பை சந்தித்து வருபவர்கள் செவ்வாழை பழத்தில் தினமும் உண்பது அவசியம்.இதில் அதிகளவு பீட்டா கரோட்டீன் இருப்பதால் இவை கண் பாதிப்பை குணமாக்கும் தன்மையை கொண்டது.இந்த செவ்வாழையை இரவு உணவிற்கு பின் உண்பது நல்லது.

*நரம்பு தளர்ச்சி பாதிப்பால் அவதிப்படும் நபர்கள் இரவு உணவிற்கு பின் செவ்வாழை பழம் சாப்பிடுவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

*அதேபோல் உடலில் ஏற்படும் தோற்று அபாயத்தை கட்டுப்படுத்த இந்த பழத்தை தினமும் உண்டு வருவது நல்லது.

*மனிதனுக்கு மூளை தான் முக்கிய உறுப்பு.இந்த மூளையின் செயல்பாட்டை அதிகரிப்பதில் செவ்வாழைக்கு முக்கிய பங்கு இருக்கிறது.அதேபோல் இதய இயக்கம்,இரத்த ஓட்டம்,சிறுநீரக இயக்கம் ஆகியவற்றிக்கு சிறந்த ஊட்டச்சத்து மிக்க பழமாக செவ்வாழை இருக்கிறது.

*அதேபோல் உடலின் மற்ற உள்ளுறுப்புகளான கல்லீரல் இயக்கம்,குடல் இயக்கம் ஆகியவற்றிக்கு சிறந்த ஊட்டச்சத்து மிக்க பழமாக செவ்வாழை இருக்கிறது.அதேபோல் உடலில் ஜீரண சக்தியை மேம்படுத்துவதில் இந்த செவ்வாழைக்கு முக்கிய பங்கு இருக்கிறது.

*ஆண்களுக்கு முக்கிய பிரச்சனையாக இருப்பது ஆண்மை குறைபாடு.இதற்கு தினமும் 1 செவ்வாழை பழம் சாப்பிட்டால் ஆண்மை சீரடையும்.

*தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதால் சொறி சிரங்கு,சரும பாதிப்பு உள்ளிட்டவை விரைவில் குணமாகும்.

*ஏற்படும் வலி,வாய் துர்நாற்றம்,பல் ஆடுதல் உள்ளிட்ட பல் சம்மந்தபட்ட பிரச்சனைகளுக்கு வியாதிகளையும் செவ்வாழைப்பழம் உரிய தீர்வாக இருக்கும்.