10 மாதம் சுமந்து பெற்ற குழந்தையை இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்காக பெற்றோர் செய்த காரியம்!! இப்படியும் நடக்குது நம் நாட்டில்!!
உல்லாச வாழ்க்கைக்காக பத்து மாதம் சுமந்து பெற்ற குழந்தையை 2 லட்சம் ரூபாய்க்கு ஒரு தம்பதியர் விற்றுவிட்டு புதிய செல்போனுடன் ஹனிமூன் சென்றுள்ளனர்.
மேற்கு வங்காள மாநிலம், வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள கர்டஹ் என்ற பகுதியை சேர்ந்தவர் ஷதி என்ற பெண், இவரது கணவர் ஜெயதேவ் கோஷ். இந்த தம்பதிக்கு ஏற்கனவே 6 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்த சூழ்நிலையில் ஷதிக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்னால் மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இவர்கள் இருவருக்கும் சமூக வலைதளத்தில் மோகம் அதிகம். இருவரும் சேர்ந்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவதற்கு விரும்பி உள்ளனர். அதற்காக ஐபோன் வாங்க திட்டமிட்ட இந்த தம்பதி 10 மாதம் சுமந்து பெற்றெடுத்த குழந்தையை சமூக வலைதள மோகத்தால் ரூபாய் 2 லட்சத்துக்கு விற்பனை செய்து உள்ளனர். அதுவும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவதற்காக ஐபோன் வாங்க இந்த காரியத்தை செய்து உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்த இந்த தம்பதியினர் திடீரென ஐபோன் வாங்கியுள்ளனர். மேலும் அவர்களது இரண்டாவது குழந்தையையும் காணவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீஸ் விசாரணையில் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்துள்ளன.
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போடுவதற்காக பச்சிளம் குழந்தையை ரூபாய் 2 லட்சத்துக்கு பிரியங்கா கோஸ் என்ற நபரிடம் விற்றுவிட்டு புதிய ஐபோன் வாங்கியுள்ளனர். எஞ்சிய பணத்தில் கணவன் மனைவி இருவரும் மேற்கு வங்காளத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஹனிமூன் சென்றதோடு மட்டுமில்லாமல் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டு குழந்தை விற்ற பணத்தை உல்லாசமாக செலவு செய்துள்ளனர்.
விசாரணையில் வெளிவந்த இந்த தகவலை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். குழந்தையை விற்பனை செய்த ஷதி ஜெயதேஷ் தம்பதியை கைது செய்த போலீசார் குழந்தையை வாங்கிய பிரியங்கா கோஸ் என்ற பெண்ணையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
உல்லாச வாழ்க்கை, சமூக வலைதள மோகம் போன்றவற்றால் பெற்ற குழந்தை என்றும் பாராமல் விற்பனை செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.