பக்தர்களே தயாரா!! உங்களுக்கான பயணத்தை எளிதாக்க புதிய வசதி!!

0
74
Devotees ready!! NEW FACILITY TO EASILY YOUR TRAVEL!!
Devotees ready!! NEW FACILITY TO EASILY YOUR TRAVEL!!

பக்தர்களே தயாரா!! உங்களுக்கான பயணத்தை எளிதாக்க புதிய வசதி!!

இந்தியாவில் பல்வேறு பிரசித்தி பெற்ற கோவில்கள் உள்ளது. தினமும் அங்கு ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் கூட்ட நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.

இந்த கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக ஐ ஆர் சி டி சி ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது உத்தர் பாரத் தர்ஷன் ட்ரிப்பின் ஒரு பகுதியான முக்கியமான மத தலங்களுக்கு மக்கள் செல்வதற்கு சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த சிறப்பு ரயில்களின் மூலமாக கோவில்களுக்கு பக்தர்கள் அனைவரும் சுலபமாக செல்ல முடியும். இதைத் தொடர்ந்து சிறப்பு பார்த் கௌரவ் எக்ஸ்பிரஸ் ஆனது இந்த ஐ ஆர் சி டி சி புனித பயணத்திற்கான பகுதிகளை இணைக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த ரயில் டிக்கெட்டில் 33  சதவிகிதம் தள்ளுபடியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த ரயிலானது பாரத் கவுரவ் ஹரித்வார், ரிஷிகேஷ், வைஷ்ணவி தேவி கோவில், அமிர்தசரஸ், மதுரா மற்றும் பிருந்தாவனம், அயோத்தி ஆகிய பகுதிகளுக்கு பயணிகளை அழைத்துச் செல்லும்.

இந்த ரயிலானது வருகின்ற ஆகஸ்ட் மாதம் பதினொன்றாம் தேதி கொல்கத்தாவில் இருந்து புறப்பட்டு மொத்தம் பத்து நாட்களுக்கு பயணம் செய்யும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.

இதில் ரேப்பர் கிளாஸ் யில் பயணம் செய்வதற்கு ஒரு நபருக்கு ரூபாய் 17  ஆயிரத்து 700 கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் 27  ஆயிரத்து 400  ரூபாய் கட்டணம் செலுத்தி மூன்றாம் ஏசி ஸ்டாண்டர்ட் கிளாசில் பயணம் செய்யலாம்.இதனையடுத்து கம்போர்ட் கிளாசில் பயணம் செய்ய ஒரு நபருக்கு முப்பது ஆயிரத்து முன்னூறு ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

author avatar
CineDesk