பரபரப்பை கிளப்பிய 10 பைசா!! வங்கி கணக்கை சோதனை செய்த பெண்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

0
151
10 Paisa which caused a sensation!! A shock awaited the women who checked the bank account!!
10 Paisa which caused a sensation!! A shock awaited the women who checked the bank account!!

பரபரப்பை கிளப்பிய 10 பைசா!! வங்கி கணக்கை சோதனை செய்த பெண்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

பெண்களின் வங்கி கணக்கில் 10 பைசா வரவு வைத்திருப்பது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

திமுக அரசு தேர்தலின் போது மாதம் குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது. தேர்தலில் கொடுத்த வாக்குறுதியின் படி கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை அரசு தற்பொது அறிவித்து அதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு தகுதி வாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்த உரிமை தொகை வழங்கும் திட்டத்தை செப்டம்பர் 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்க இருக்கிறார். இந்த திட்டத்துக்கான பயனாளிகளாக ஆண்டு வருமானம் 21/2 லட்சத்துக்கு கீழே இருக்க வேண்டும்.  கார், ஜீப், டிராக்டர் உள்பட நாலு சக்கர வாகனங்கள் வைத்திருக்கக் கூடாது. மேலும் ஆண்டுக்கு 3600 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தக்கூடாது என்பது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

இந்த நிபந்தனைகளுடன் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் அமைத்து குடும்பத் தலைவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த திட்டத்திற்கு ஒரு கோடியே 63 லட்சம் குடும்பத் தலைவிகள் விண்ணப்பித்து இருந்தனர். இவற்றை பரிசீலனை செய்து ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தகுதி வாய்ந்த பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

சுமார் 56 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் தங்களது விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டிருக்குமோ என்று பல பெண்களுக்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு இடையில் விண்ணப்பித்த பலருக்கு வங்கி கணக்கில் 10 பைசா வரவு வைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளின் வங்கி கணக்குகளை சரிபார்க்கும் வகையில் இந்த தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது ரேஷன் கடை மற்றும் பேருந்து நிறுத்தங்களில் சந்தித்துக் கொள்ளும் பெண்கள் அக்கா உங்களுக்கு பத்து பைசா வந்து விட்டதா என்பது போன்ற உரையாடல்களே தற்போது கேட்டு வருகிறது.

இந்நிலையில் 10 பைசா கணக்கில் வந்தவர்களுக்கு உரிமை தொகை கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும் இதுவரை வராதவர்களுக்கு கிடைக்குமோ? கிடைக்காதோ? என்ற பயத்திலும் உள்ளனர்.

 

Previous articleபெருகி வரும் தெருநாய்கள் தொல்லையால் மக்கள் அச்சம்!! நடவடிக்கை எடுப்பார்களா?? அதிகாரிகள்!!
Next articleபுரட்டாசி மாதத்தில் நிகழப்போகும் நவகிரங்கள் பெயர்ச்சி – துன்பத்தை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள்!