ஹேப்பி நியூஸ் மகளிர்க்கு ரூபாய் 1000 உரிமைத் தொகை!! முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை!!

Photo of author

By Amutha

ஹேப்பி நியூஸ் மகளிர்க்கு ரூபாய் 1000 உரிமைத் தொகை!! முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை!!

Amutha

1000 Rupees Entitlement Amount for Happy News Women!! Chief Minister Stalin's important advice today!!

ஹேப்பி நியூஸ் மகளிர்க்கு ரூபாய் 1000 உரிமைத் தொகை!! முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை!! 

தமிழ்நாட்டில் மகளிர்க்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்குவது தொடர்பாக இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

திமுக தேர்தலுக்கு முன்னர் ஏராளமான வாக்குறுதிகளை கொடுத்திருந்தது. அதில் முக்கியமாக மக்கள் அனைவரையும் கவர்ந்த அறிவிப்பு ஒன்று என்றால் மகளிர்க்கு மாதம்  மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் உரிமை தொகை வழங்குவது தான்.

அதற்கு அடுத்ததாக ஏழ்மையில் உள்ள பெண்களுக்கு ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அது உரிமை தொகையாக கருதப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.  அன்றுமுதல் அது மகளிர்க்கான  உரிமைதொகை என அழைக்கப்பட்டு வந்தது.

இந்த உரிமைத் தொகை எப்போது வழங்கப்படும் என்று தொடர்ச்சியாக ஏராளமான கேள்விகள் எதிர்க்கட்சிகள் மற்றும் மகளிர் இடையே எழுப்பப்பட்டன.

இது தொடர்பாக பல்வேறு கேள்விகள் தொடர்ச்சியாக எழுப்பப்பட்ட நிலையில் கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட கூட்டத்தில் அப்போதைய நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் இது தொடர்பாக ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார்.

அந்த அறிவிப்பில் மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கான பட்டியல் தயார் அது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார். அதற்காக சுமார் 7000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறினார்.

இதன் அடிப்படையில் முதலில் ஒரு கோடி பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்றும் அது முதலில் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதாவது அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு உரிமை தொகையானது மாதந்தோறும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இன்னிலையில் தொடர்ச்சியாக மக்கள் நல பணிகளை திமுக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.  அந்த வகையில் உரிமை தொகை வழங்குவதற்கான காலக்கெடு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அதற்கான முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

செப்டம்பர் 15ஆம் தேதி முதல் வழங்கப்படும் இந்த உரிமை தொகையானது நேரடியாகவா? அல்லது வங்கி கணக்கிலா? மற்றும் மாதம் தோறும் எந்த தேதியில் வழங்கப்படும் உட்பட பல்வேறு முடிவுகளை எடுப்பதற்காக இன்று முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு துறை சார்ந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்குபெற உள்ளனர்.  ஆலோசனை முடிந்த பின்னர் தான் எந்த தேதியில் மற்றும் எப்படி வழங்கப்படும் போன்ற அறிவிப்புகள் வெளிவரும்.