பத்தாம் வகுப்பு மாணவனை சரமாரியாக வெட்டிய ரவுடி கும்பல்!

0
159

பத்தாம் வகுப்பு மாணவனை சரமாரியாக வெட்டிய ரவுடி கும்பல்!

தெருவில் செல்போன் பார்த்துக்கொண்டிருந்த பத்தாம் வகுப்பு மாணவனை இருசக்கர வாகனத்தில் வந்த ரவுடி கும்பல் சரமாரியாக வெட்டிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் கஜேந்திரன். இவருடைய மகன் தியாகு. தியாகு பத்தாம் வகுப்பு படித்து வருகிறான்.

தியாகு நேற்று முன்தினம் தனது வீட்டின் வெளியே உட்கார்ந்து செல்போன் பார்த்துக் கொண்டே இருந்திருக்கிறார். அந்த வழியில் இரு சக்கர வாகனத்தில் நான்கு பேர் சென்றுள்ளனர். தெருமுனை வரை சென்று திரும்பி வந்துள்ளனர். திரும்பி வரும்பொழுது இருசக்கர வாகனத்தில் இருந்த ஒரு நபர் கத்தியால் திடீரென தியாகுவை வெட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தியாகு, அலறியடித்துக்கொண்டு அவர்களிடம் இருந்து தப்பி வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார்.

பின்னர் அந்த நபர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளன.

கத்தியால் வெட்டியதால் காயமடைந்த தியாகுவை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில் மாணவனை கத்தியால் வெட்டியவர் ரவுடி கும்பலை சேர்ந்த புறா மணி என்றும், முன்விரோதம் காரணமாக வேறு ஒருவரை கொலை செய்ய வந்த புறா மணி, அந்த நபர் அங்கு இல்லாததால் ஆத்திரத்தில் தியாகுவை வெட்டி உள்ளார் எனவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்த மேலும் விசாரணைக்கு வழக்குப்பதிவு செய்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous article2 நிமிடத்தில் PAN அட்டையுடன் Aadhar அட்டையை இணைக்கலாம் !
Next articleபிக்  பாஸ் சீசன்-4ல் பங்கேற்காமல் தெறித்து ஓடிய இளம் நடிகர்கள்! சிக்கிய விஜய் டிவி பிரபலம்!