2 நிமிடத்தில் PAN அட்டையுடன் Aadhar அட்டையை இணைக்கலாம் !

0
156

2 நிமிடத்தில் PAN அட்டையுடன் Aadhar அட்டையை இணைக்கலாம் !

இணையத்தளத்தின் மூலம் ஆன்லைனிலேயே எளிமையாக இணைக்க முடியும். இதனை www.incometaxindiaefiling.gov.in என்ற இணையத்தளத்தை பயன்படுத்தி செய்யலாம்.

வருமான வரி தாக்கல் செய்ய கொடுக்கபட்டுள்ள காலக்கெடு முடிவடைய உள்ளதால் உங்கள் பான் அட்டையை (PAN) ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். வரி செலுத்துவோர் 2019-20 நிதியாண்டுக்கான (FY 2020-21) வருமான வரி வருமானத்தை (ஐ.டி.ஆர்) தாக்கல் செய்வார்கள்.

1.முதலில்www.incometaxindiaefiling.gov.in என்ற இணையத்தளத்திற்குள் செல்லவும்.

2. அதில் ஆதாரையும் பேன் கார்டையும் இணைக்கும்(Link Aadhar) ஆப்ஷனுக்கு செல்லவும்

3. அதில் பேன் எண் மற்றும் ஆதார் எண் பதிவிடவும்.

4. உங்கள் ஆதார் அட்டையில் இருக்கும் அதே பெயரை பதிவிடவும்

5. ஒருவேளை உங்கள் ஆதார் எண்ணில் பிறந்த வருடம் மட்டுமே இருந்தால் டிக் பட்டனை கொடுக்கவும்

6.Captcha Code ஒன்று தோன்றும். அதை டைப் செய்யவும்.

7. பின்னர் லிங்க் ஆதார் என்று கொடுக்கவும்.

பின் ஆதார் அட்டையும் பான் அட்டையும் இணைந்து விட்டதா என்பதை அறிய

ஆதார் மற்றும் பான் எண்ணை டைப் செய்து கிளிக் செய்தால் உங்களுடைய பான் ஆதார் என்னுடன் இணைந்து விட்டதா என்ற நிலையை காட்டும்.

அவ்வளவு தான் உங்களில் பேன் ஆட்டையும் ஆதார் அட்டையும் இணைக்கப்பட்டது.

2019-20 ஆம் ஆண்டிற்கான அனைத்து வருமான வரி வருமான தேதிகளும் 2020 ஜூலை 31 மற்றும் அக்டோபர் 31 முதல் நவம்பர் 30 வரை நீட்டிக்கப்படும் என்றும், வரி தணிக்கை 2020 செப்டம்பர் 30 முதல் 31 அக்டோபர் வரை நீட்டிக்கப்படும் என்றும் அரசாங்கம் இந்த ஆண்டு மே மாதம் அறிவித்துள்ளது.

author avatar
Kowsalya