இந்த இடத்தில் 12 சிறுமிகள் ரயிலில் கடத்தல்! காரணம் இதுதான் போலீசார் தீவிர விசாரணை!
குஜராத் மாநிலத்தில் ஓக்காவிலிருந்து கடந்த 26 ஆம் தேதி எர்ணாகுளம் நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது மேலும் கேரளா மாநிலம் கோழிக்கோடு ரயில் நிலையத்தை வந்தடைந்தது 8 வயது முதல் 18 வயதான சிறுமிகள் 12 பேர் பயணம் செய்தனர் அவர்களுடன் நாலு பெரியார்கள் இருந்தனர் அவர்கள் செயல்பாடுகளில் பயணிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. சந்தேக காரணமாக உடனடியாக கோழிக்கோடு ரயில்வே போலீசிற்கு தகவல் கொடுத்தனர். மேலும் இந்த தகவலின் படி ரயில்வே போலீசார் விசாரணை ஈடுபட்டனர்.
மேலும் எர்ணாகுளம் மாவட்டம் உள்ள ஒரு தனியார் ஆதரவற்ற காப்பகத்திற்கு சிறுமிகளை அனுமதியின்றி அழைத்துச் செல்வது தெரிய வந்தது. சிறுமிகளை அழைத்து வந்த இரண்டு பேர் பெற்றோர் என்பதும் மற்ற இரண்டு பேர் சிறுமிகளை கடத்த ப்ரோக்கர்கள் எனவும் தெரியவந்தது.
மேலும் அவர்கள் இருவரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த லோகேஷ் குமார் ஷியாம் லால் என்பது தெரிய வந்தது இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர் மேலும் அந்த இருவரிடம் விசாரணை நடத்திய பொழுது பெரும் பாவூரில் உள்ள கருண பகவான் என்ற ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்திற்கு இந்த 12 சிறுவர்களையும் அழைத்துச் செல்வதாகவும் கூறினார்கள்.
மேலும் அந்த காப்பகத்தை பாஸ் ஜோக்கப் வர்கீஸ் என்பவர் நடத்தி வருகிறார் என்பது தெரிய வந்தது. மேலும் இதைத் தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஏதோ மர்மம் உள்ளது என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது அதனால் பாஸ்டர் உள்ளிட்ட மூன்று பேரையும் காவலில் எடுத்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.