10 மற்றும் 12வகுப்பு தனித்தேர்வர்கள் ஆல்பாஸ்!! பாஜக தேசிய மகளிர் அணி செயலாளர் கோரிக்கை!!

Photo of author

By Jayachithra

10 மற்றும் 12வகுப்பு தனித்தேர்வர்கள் ஆல்பாஸ்!! பாஜக தேசிய மகளிர் அணி செயலாளர் கோரிக்கை!!

Jayachithra

10 மற்றும் 12வகுப்பு தனித்தேர்வர்கள் ஆல்பாஸ்!! பாஜக தேசிய மகளிர் அணி செயலாளர் கோரிக்கை!!

கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பாஜக தேசிய மகளிர் அணி செயலாளருமான வானதி ஸ்ரீனிவாசன் தமிழக அரசுக்கு பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தனித்தேர்வர்கள் ஆல்பாஸ் என அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருக்கிறார். மேலும் ‘கொரோனா பெருந்தொற்றில் பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் தேவை எதிர்நோக்கியிருந்த அனைவருக்கும் தேர்ச்சி வழங்க மத்திய அரசு அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து தமிழக அரசு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவித்தது. அவர்களின் பத்தாம் மற்றும் பதினொன்றாம் வகுப்பு மதிப்பெண்ணை பன்னிரண்டாம் வகுப்பு நடைமுறை தேர்வின் அடிப்படையில் தேர்ச்சி மதிப்பெண் வழங்கப்பட்டு விட்டது. இருந்தாலும், ஒரு லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் தனித்தேர்வு எப்போது தேர்வு எழுத வேண்டும் என்று காத்து இருக்கின்றனர். அவர்களுக்கு இதுவரையிலும் தேதி அறிவிக்கப்படவில்லை.

அது மட்டுமில்லாமல் அவர்கள் தேர்வையும் அக்டோபரில் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். நவம்பரில் தேர்ச்சி முடிவுகள் என்று வந்தால் அந்த மாணவர்கள் உயர்கல்வியில் செய்கிறார்கள் என்பது அரசு பரிசீலிக்க வேண்டும். அது மட்டுமில்லாமல் தனித்தேர்வர்கள் தேர்ச்சிக்கு முறையான மதிப்பீடு அணுகுமுறை என்ன என்பதையும் அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

தமிழக அரசு 10, 12ஆம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு தேர்ச்சியை முன்கூட்டியே அறிவித்து அவர்களுக்கு முறையான மதிப்பெண் வழங்கப் பட்டால் அந்த மாணவர்களும் உயர்கல்வி பெறுவதற்கு மிகவும் வசதியாக இருக்கும் என்று கூறியுள்ளார். அதனை தொடர்ந்து லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலமும் கல்வியையும் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்ற வானதி ஸ்ரீனிவாசன் தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.