14 வயது சிறுமி கர்ப்பம் – கருவை கலைக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்!
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளியின், 14 வயது மகளை அதே பகுதியை சேர்ந்த உறவினரின் மகன் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார். வெளியே சொன்னால் உன்னை தொலைத்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.
நாளடைவில் சிறுமி வாந்தி மயக்கம் என இருந்ததால், சந்தகமடைந்த சிறுமியின் பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அதில் சிறுமி கர்ப்பம் என தெரியவந்தது.
அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், இதுகுறித்து சிறுமியிடம் கேட்டுள்ளனர். அவளும் தனக்கு நடந்ததை கூறியிருக்கிறாள்.
பின் திருவண்ணாமலை மகளிர் காவல் நிலையத்தில், ஏமாற்றிய இளைஞர் மீது புகார் அளித்துள்ளனர். மேலும் சிறுமியின் படிப்பை கருத்தில் கொண்டு, கருவை கலைத்து விடுங்கள் என்று மருத்துவரிடம் சொல்லியிருக்கிறார்.
கர்ப்பம் அடைந்து 24 நாட்கள் ஆனதால், கருவை கலைக்க மாட்டேன் என்று மருத்துவர் கூறியிருக்கிறார். இதை தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருக்கிறார்.
“என் மகளின் படிப்பு தான் எனக்கு முக்கியம். அந்த கருவை கலைத்தால் தான், என் மகள் மீண்டும் பள்ளி செல்ல முடியும். எனவே திருவண்ணாமலை அரசு மருத்துமனை முதல்வருக்கு, கருவை கலைக்க உத்தரவிடுமாறு” அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி கரு கலைத்தால் உயிருக்கு ஆபத்து, ஆனால் சிறுமிக்கு 18 வயது பூர்த்தி அடையவில்லை. எனவே சிறுமியின் உயிருக்கு ஆபத்து இல்லாமல் இரண்டு வாரத்தில் கருவை கலைத்து விட வேண்டும். என உத்தரவிட்டு வழக்கை முடித்தார்.