மாண்டஸ் புயலால் அறுந்து விழுந்த மின்கம்பி.. இருவர் பரிதாப பலி..!

0
182

மாண்டஸ் புயல் காரணமாக மின் வயர் அறுந்து விழுந்ததில் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 5ம் தேதி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது 7ம் தேதி தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. அதன்பின்னர், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக மாறியது. இந்நிலையில், நேற்று புதுவைக்கும் ஸ்ரீஹரிக்கோட்டாவிற்கும் இடையில் மகாபலிபுரத்தில் கரையை கடந்தது.

புயலால் பலத்த காற்று வீசியதால் பல இடங்களில் மரங்கள் மற்றும் மின் வயர்கள் அறுந்து விழுந்துள்ளன. இதனால், பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதோடு மின்சாரமும் துண்டிக்கப்படட்து. இந்நிலையில், மின் வயர் அறுந்து விழுந்து சென்னையில் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, மடிப்பாக்கம் பகுதியில் பலத்த காற்று வீசியதால் அங்குள்ள மரங்கள், மின் வயர்கள் அறுந்து விழுந்தன. அந்த பகுதியை லட்சுமி என்பவரும் அவரது அண்ணன் மகன் ராஜேந்திரன் என்பவரும் வெளியில் சென்ற போது அறுந்து கிடந்த மின் வயரை எதிர்பாராத விதமாக மிதித்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.மாண்டஸ் புயல் காரணமாக மின் வயர் அறுந்து விழுந்ததில் இருவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleமாண்டஸ் புயல் எதிரொலி! விமான போக்குவரத்து துறை வெளியிட்ட உத்தரவு!
Next articleமாண்டாஸ் புயல்.. மின் துண்டிப்பு! சென்னைவாசிகளுக்கு அமைச்சர் வெளியிட்ட தகவல்!