நாட்டில் 20 போலியான பல்கலைக்கழகங்கள்!! யுஜிசி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
நாட்டில் அனைத்திலும் குளறுபடிகள் அரங்கேறிக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது கல்வியிலும் இது போன்று நிலைமை ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில், தற்போது இந்தியாவில் மட்டும் மொத்தம் இருபது போலியான பல்கலைக்கழகங்கள் இயங்கி வருவதாக பல்கலைகழக மானியகுழுவான யுஜிசி நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறி உள்ளது.
அதாவது டெல்லியில் மொத்தம் எட்டு போலி பல்கலைக்கழகங்கள், உத்தர பிரதேசத்தில் நான்கு பல்கலைக்கழகங்கள், மேற்கு வங்காளம் மற்றும் ஆந்திர பிரதேசத்தில் இரண்டு போலி பல்கலைக்கழகங்கள் மற்றும் கர்நாடகா, கேரளா, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் ஒரு பல்கலைக்கழகங்கள் என மொத்தமாக இருபது பல்கலைக்கழகங்கள் போலியானது என்று யுஜிசி நேற்று அறிவித்துள்ளது.
மேலும், போலியான இந்த இருபது பல்கலைக்கழகங்களில் வழங்கப்படுகின்ற இந்த சான்றிதழ்கள் அனைத்தும் தகுதி அற்றவை என்று மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது.
இந்த பல்கலைகழகங்களுக்கு எந்த ஒரு பட்டமும் வழங்க அதிகாரம் கிடையாது. யுஜிசி யின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடக்காத எந்த ஒரு கல்வி நிலையங்களுக்கும் பட்டம் வழங்குவது,வேலைவாய்ப்பு பெற்று தருவது முதலிய அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டாது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த அறிவிப்பு நேற்று யுஜிசியால் வெளிவிடப்பட்ட போலியான பல்கலைக்கழகங்கள் குறித்த பட்டியலில் வெளிவந்தது. இதன்படி இந்த பல்கலைக்கழகங்களில் மாணவ, மாணவிகள் படிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த பல்கலைக்கழகங்களுக்கு அனைத்து அதிகாரங்களும் ரத்து செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. குறிப்பாக பட்டங்கள் வழங்குவதற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.