ஆடி 18 ஆம் பெருக்கு தாலி கயிறு மாற்ற உகந்த நாள்!!

0
103

ஆடி 18 ஆம் பெருக்கு தாலி கயிறு மாற்ற உகந்த நாள்

தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்று ஆடி பெருக்கு விழா.ஆடிப்பெருக்கில் தொடங்கிய எந்த ஒரு காரியமும் நன்றாக சிறக்கும் என்பது ஐதீகம்.இந்நாளில் எந்த ஒரு பொருள் வாங்கினாலும் அவை பன்மடங்கு பெருகி நன்மை பயக்கும் என்பது அனைவரின் நம்பிக்கை.அதன்படி ஆடி பெருக்கன்று மக்கள் தங்கம் வாங்கி சேர்ப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.இந்நாளில் நகை கடைகளில் கூட்டம் அலைமோதும்.

இந்நிலையில் தங்கம் வாங்க முடியாதவர்கள் ‘குண்டு மஞ்சள்’ வாங்கி வீட்டில் வைப்பதன் மூலம் தங்கத்திற்கு இணையான பலனை பெறுவார்கள் என்பது சாஸ்திரம்.மேலும் மக்கள் அனைவரும் குடும்பமாக கோவில்களுக்கு சென்று வழிபாடு மேற்கொண்டு வேண்டிய பலனை அடைவார்கள்.

இதன்படி சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட மக்கள் இந்நாளில் கொல்லிமலை சென்று அங்குள்ள ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் நீராடி அரப்பளீஸ்வரரரை வணங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

மேலும் ஆடி 18 என்றால் மற்றொரு சிறப்பு பெண்கள் மாங்கல்ய கயிறை மாற்றிக்கொள்வது. மாங்கல்யத்தில் லட்சுமி காசு உருக்கள்,குண்டுமணி ஆகியவற்றை சேர்த்துக்கொள்வதன் மூலம் கணவருக்கு ஆயுள் பெருகும் என்பது ஐதீகம். எனவே ஆடி பெருக்கு விழாவை பெண்கள் மிக பக்திப்பூர்வமாக கொண்டாடுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.புதுமண தம்பதிகள் இன்று காவிரி ஆற்றில் நீராடுவதும் கடைபிடிக்கப்படும் வழக்கங்களில் ஒன்று.மேலும் ஆடி-18 ஆன இன்று மாங்கல்ய கயிறு மாற்றுவதற்கான உகந்த நேரமாக காலை 10:45 மணி முதல் பிற்பகல் 1:15 மணி வரை இருக்கின்றது.

இந்நிலையில் இன்றைய நாளில் ஆடி பெருக்கை கொண்டாடுவதற்காக மக்கள் அனைவரும் கோவில்களில் வழிபட்டும் ,ஆற்றங்கரையில் நீராடியும் வருகின்றனர்.