இந்த ஆண்டில் மொத்தமாக 2000 கோடி ரூபாய் வசூல் ஈட்ட காரணமாக இருந்த தமிழ் திரைப்படங்கள்!!! வாரிசு முதல் லியோ வரை பட்டியல் இதோ!!!

0
154
#image_title

இந்த ஆண்டில் மொத்தமாக 2000 கோடி ரூபாய் வசூல் ஈட்ட காரணமாக இருந்த தமிழ் திரைப்படங்கள்!!! வாரிசு முதல் லியோ வரை பட்டியல் இதோ!!!

2023ம் ஆண்டில் இதுவரை வெளியான திரைப்படங்களில் தமிழ் சினிமாவிற்கு 2000 கோடி ரூபாய் வசூல் செய்து கொடுத்த தமிழ் திரைப்படங்கள் பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

தமிழ் சினிமா உலகில் முதல் முறையாக இந்த ஆண்டு 10 படங்களின் மூலமாக மட்டுமே 2000 கோடி ரூபாய் வசூல் கிடைத்துள்ளது. அதன் படி நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், அஜித், தனுஷ், விஷால், சிவகார்த்திகேயன், உதய்நிதி ஸ்டாலின், அதைக் செல்வன் ஆகியோரது நடிப்பில் வெளியான திரைப்படங்கள் மாபெரும் வசூலை உலக அளவில் அள்ளிக் கொடுத்துள்ளது.

01. ஜெயிலர்…

இந்த பட்டியலில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியானது. இந்த திரைப்படம் நடிகர் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் உலக அளவில் ஜெயிலர் திரைப்படம் 600 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

02. லியோ…

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19ம் தேதி வெளியானது. லியோ திரைப்படத்தின் வசூல் தற்பொழுது வரை 403 கோடி ரூபாய் என்று தகவல் வெளியாகி இருக்கின்றது. லியோ திரைப்படம் வெளியாகி சில நாட்களே ஆகும் நிலையில் இன்னும் உலக அளவில் வசூல் வேட்டை நடத்தி ஜெயிலர் திரைப்படத்தின் வசூலை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

03. பொன்னியின் செல்வன் 2…

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் திரையுலக முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்த பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளியானது. பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் உலக அளவில் 345 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது.

04. வாரிசு…

இயக்குநர் வஞ்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான தமிழ் படமான வாரிசு திரைப்படம் ஜனவரி மாதம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான வாரிசு திரைப்படம் உலக அளவில் 310 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

05. துணிவு…

அதே ஜனவரி மாதம் பொங்கலுக்கு நடிகர் அஜித் நடித்த துணிவு திரைப்படமும் வெளியானது. துணிவு திரைப்படத்தை ஹெச் வினோத் இயக்கியிருந்தார். துணிவு திரைப்படம் உலக அளவில் 230 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது.

06. வாத்தி…

நடிகர் தனுஷ் நடிப்பில் தமிழ் தெலுங்கு ஒன்று இரண்டு மொழிகளில் உருவான வாத்தி திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளியானது. வாத்தி திரைப்படத்தை இயக்குநர் வெங்கி அட்லுரி இயக்கியிருந்தார். வாத்தி திரைப்படம் உலக அளவில் 118 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

07. மார்க் ஆண்டனி…

நடிகர் விஷால், எஸ்.ஜே சூரியா நடிப்பில் கடந்த செப்டம்பர் மாதம் மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியானது. மார்க் ஆண்டனி திரைப்படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். மார்க் ஆண்டனி திரைப்படம் உலக அளவில் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

08. மாவீரன்…

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் உருவான மாவீரன் திரைப்படம் கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி வெளியானது. குறைந்த செலவில் உருவான மாவீரன் திரைப்படம் உலக அளவில் 89 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

09. மாமன்னன்…

நடிகர்கள் உதய்நிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான மாமன்னன் திரைப்படம் ஜூன் மாதம் 29ம் தேதி வெளியானது. மாமன்னன் திரைப்படம் உலக அளவில் 52 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

10. போர் தொழில்

நடிகர்கள் அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல் ஆகியோரது நடிப்பில் உருவான போர் தொழில் திரைப்படம் ஜூன் 9ம் தேதி வெளியானது. போர் தொழில் திரைப்படத்தை இயக்குநர் விக்னேஷ் ராஜா அவர்கள் இயக்கியுள்ளார். போர் தொழில் திரைப்படம் உலக அளவில் 50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

இந்த பத்து திரைப்படங்கள் மூலமாக மட்டுமே தமிழ் சினிமா இந்த வருடம் உலக அளவில் 2297 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. மேலும் பல சின்ன திரைப்படங்களும் பெரிய அளவில் வசூல் செய்ய வில்லை என்றாலும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

Previous articleதளபதி68 திரைப்படத்தின் பூஜை வீடியோ வெளியானது!!! யாரெல்லாம் நடிக்கிறாங்க பாருங்க!!!
Next articleரூ.50,000 வழங்கப்படும் “பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்”!! நாளை விண்ணப்பம் செய்ய இறுதி நாள்!!