ரூ.50,000 வழங்கப்படும் “பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்”!! நாளை விண்ணப்பம் செய்ய இறுதி நாள்!!

0
44
#image_title

ரூ.50,000 வழங்கப்படும் “பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்”!! நாளை விண்ணப்பம் செய்ய இறுதி நாள்!!

எந்த ஒரு நாட்டில் பெண்களுக்கான கல்வி தரம் சிறப்பாக இருக்கிறதோ அந்த நாடு வளர்ச்சி பாதையை நோக்கி செல்கிறது என்று அர்த்தம். நம் நாட்டில் சில பகுதிகளில் பெண் பிள்ளைகள் கல்வி இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. இதற்காக மத்திய மற்றும் மாநில அரசு பெண்களுக்கென பல நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு பெண் பிள்ளைகளுக்கென பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தை கடந்த 1992 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.

இது பெண் பிள்ளைகள் பிறப்பு விகிதம் அதிகரிக்க மற்றும் அவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்த கொண்டுவரப்பட்ட திட்டமாகும். அதுமட்டும் இன்றி பெண்களின் உரிமையை நிலைநாட்ட இந்த திட்டம் பெரிதும் உதவியாக இருப்பதால் அனைவரின் மத்தியிலும் பெரும் வரவேற்ப்பை பெற்று வரும் திட்டங்களில் ஒன்றாக இருக்கிறது.

பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் இணைய தகுதி?

*பெற்றோர் தங்களது பெண் குழந்தைக்கு 3 வயது முடிவதற்குள் இந்த திட்டத்தில் பயனடைய விண்ணப்பம் செய்ய வேண்டும்.

*குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால் அந்த குழந்தைக்கு ரூ.50,000க்கான டெபாசிட் பாத்திரம் வழங்கப்படும்.

*இரண்டு பெண் குழந்தைகள் மட்டும் இருந்தால் இருவருக்கும் தலா ரூ.2,5000க்கான டெபாசிட் பாத்திரம் வழங்கப்படும்.

*முதலில் பெண் குழந்தை அடுத்த பிரசவத்தில் ஒரே நேரத்தில் இரு பெண் குழந்தைகள் பிறந்தால் ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.25,000 என மொத்தம் ரூ.75,000க்கான டெபாசிட் பாத்திரம் வழங்கப்படும்.

இந்த திட்டத்தில் சேர்ந்த பெண் பிள்ளைகளுக்கு அவர்களின் 18 வயதுக்கு பின்னர் முதிர்வு
தொகையானது அவர்களுக்கு வழங்கப்படும்.

இந்த திட்டத்தில் சேர தேவைப்படும் ஆவணங்கள்:-

*பெண் குழந்தையின் தாயாரின்‌ மாற்றுச் சான்றிதழ்

*பெண் குழந்தையின் தந்தையரின் மாற்றுச் சான்றிதழ்

*பெற்றோர் திருமண பத்திரிக்கை

*பெண் குழந்தையின் பிறப்பு சான்றிதழ்

*வருமானச் சான்றிதழ்

*சாதிச் சான்றிதழ்

*இருப்பிடச் சான்றிதழ்

*ஆண் பிள்ளை இல்லை என்பதற்கான சான்று

*தாய் அல்லது தந்தையின் கருத்தடை செய்ததற்கான சான்று

*2 பெண் குழந்தைக்கு பின்‌ ஆண்‌ குழந்தை தத்தெடுக்க மாட்டோம்‌ என்பதற்கான உறுதி மொழிப்பத்திரத்தை ரோட்டரி வழக்கறிஞரிடம்‌ பெற்றிருக்க வேண்டும்.

*குடும்ப அட்டை நகல்

*புகைப்படம் (தாய், தந்தை, பெண் குழந்தை அடங்கிய புகைப்படம்)

விண்ணப்பம் செய்ய வேண்டிய இடம்: வட்டார வளர்ச்சி அலுவலகத்தில்‌ இருக்கும் சமூகநல விரிவாக்க அலுவலர்‌ மற்றும்‌ மகளிர்‌ ஊர்நல அலுவலரை அணுகி விண்ணப்பம் செய்ய வேண்டும்.

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 25-10-2023