5000 கொடுக்க மறுத்ததால் தாயைக் கொன்ற மகன்!

0
258
#image_title

ரூ ஐந்தாயிரம் கொடுக்க மறுத்ததால் 21 வயதான இளம் ஆண் தனது தாயை கொன்று சூட்கேசில் மறைத்து வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஹரியானா பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.

21 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் தனது தாயைக் கொன்று சூட்கேஸில் மறைத்து அதை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் சென்று அதை ரயிலில் உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜுக்குச் சென்று உடலை அப்புறப்படுத்த நினைத்துள்ளார்.

பீகாரைச் சேர்ந்த ஹிமான்ஷு என்பவர் தனது தாயிடம் ரூ.5,000 கேட்ட சம்பவம் டிசம்பர் 13ஆம் தேதி நடந்ததாக கூறப்படுகிறது. அவர் மறுத்ததால், அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஹிமான்ஷு தனது தாயின் கழுத்தை நெரித்து கொன்றதாக போலீசார் தெரிவித்துள்ளது.

அன்று மாலையே , அவர் தனது தாயின் உடலை ஒரு சூட்கேஸில் அடைத்து, உடலை அப்புறப்படுத்துவதற்காக ரயிலில் பிரயாக்ராஜ் எடுத்து சென்றுள்ளார்.

ஆனால், அந்த பகுதியில் ரோந்து வந்த போலீசார் சந்தேகமடைந்த போலீசார், சூட்கேசை சோதனையிட்டபோது, ​​அதில் பெண்ணின் உடல் அடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

போலீசார் நடத்திய விசாரணையில் , ஹரியானா மாநிலம் ஹிசாரில் உள்ள ஹிமான்ஷுவின் வீட்டு உரிமையாளரை போலீசார் தொடர்பு கொண்டனர்.

அங்கு அவர் தனது தாயுடன் வாடகை அறையில் வசித்து வந்துள்ளர். கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு முன்பு அவர்கள் வீட்டை வாங்கியதாகவும், ஹிமான்ஷுவும் அவரது தாயும் ஒரு வாரத்திற்கு முன்பும் குடியேறியதாகவும் உரிமையாளர் போலீசாரிடம் கூறினார். டிசம்பர் 13ம் தேதி காலை ஹிமான்ஷுவின் தாயை உரிமையாளர் கடைசியாக பார்த்தாக கூறி உள்ளனர்.

அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவையும் போலீசார் ஸ்கேன் செய்துள்ளனர்., அதில் ஹிமான்ஷு ஆட்டோவில் எதையோ வைத்திருப்பதைக் காட்டியுள்ளது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.

Previous articleமீண்டும் கொரோனா! எச்சரித்த முன்னாள் அமைச்சர்
Next articleகர்ணனின் கவசத்தை உடைக்க 1000 வருட போராடிய கிருஷ்ணன்! கர்ணனின் முன் ஜென்மக்கதை?