மீண்டும் கொரோனா! எச்சரித்த முன்னாள் அமைச்சர்

0
252
#image_title

இப்பொழுதுதான் சென்னை மிகப் பெரிய ஆபத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வருகின்றது. ஆனால் மறுபடியும் கொரோனா வரும் என்று சொல்லி முன்னால் அமைச்சர் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னால் சுகாதாரத்துறை அமைச்சர் பாஸ்கர் மீண்டும் கொரோனா வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் கொரோனாவின் மறு வளர்ச்சி பரவி வருவதாகவும் அது மூன்று நான்கு நாட்களுக்குள் தானாகவே சரியாகி விடுவதாகவும் செய்தியாளர்கள் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் பாஸ்கரிடம் கேட்டுள்ளார்கள்.

அதற்கு அவர் இரண்டு மூன்று நாட்கள் காய்ச்சல் விட்டு விடுகிறது, ஆனால் 15 நாட்களுக்கு மேல் உடல் வலியால் மக்கள் அவதிப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார். மேலும் ஒமிக்கிறான் மாறுதல் வளர்ச்சியான ஜே வரியன்ட் பரவி வருகின்றது. அது தமிழகத்தில் இருக்கின்றதா? வந்துவிட்டால் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறோம்? மாஸ்க் போட சொல்ல போகிறோமா? இல்லை என்ன நடவடிக்கை? இதற்கு அமைச்சர் என்ன பதில் சொல்லுவார் என்று கேட்டுள்ளார்.

இதற்கு என்ன நடவடிக்கை எடுக்க போகின்றோம்? மக்களுக்கு என்ன ஆலோசனை? என்ன எச்சரிக்கை? என்ன முன்னெச்சரிக்கை தரப் போகின்றீர்கள்? என்று செய்தியாளர்களிடம் கேட்டுள்ளார்.

மேலும், அது ஒன்றும் பயப்பட தேவையில்லை என்றுதானே செய்திகள் பரவி வருகின்றன. என்று செய்தியாளர் கேட்க, முன்னால் மருத்துவத்துறை அமைச்சரிடம் கேட்ட பொழுது ” நீங்கள் முதல் டெஸ்ட் பண்ணுங்கள், டெஸ்ட் பண்ணாமலேயே, இது எந்த ஒரு பாதிப்பையும் தராது என்று, கூறாதீர்கள்! அதிமுக ஆட்சியில் கொரோனாவிற்கு எத்தனையோ நாங்கள் செய்திருக்கின்றோம். முதலில் டெஸ்ட் செய்துவிட்டு அது கொரோனா தான், அது பன்றிக்காய்ச்சல் தான், அது டெங்கு தான் பயப்படாதீர்கள்! என்று சொல்லுங்கள், ஏற்று கொள்கிறோம். ஆனால் டெஸ்ட்டே செய்யாமல் இதற்கு பயப்படத் தேவையில்லை என்று சொல்வது எப்படி ஏற்றுக் கொள்ளப்படும் என்று கேட்கின்றார்.

மேலும் அவர் கேரளாவில் மூன்று இறப்புகள் ஏற்பட்டுள்ளது. அதற்கு என்ன சொல்ல வருகின்றீர்கள்? இப்பொழுது சபரிமலை சீசன் என்பதால் மக்கள் சபரிமலையின் ஐயப்பனை பார்ப்பதற்கு அலை மோதுகின்றனர். சபரிமலை ஐயப்பனை பார்ப்பதற்கே 12 மணி நேரம் கியூவில் நிற்கின்றனர். அடுத்தது கிறிஸ்மஸ் வரப்போகிறது, அடுத்தது நியூ Year வரப்போகின்றது, இது மக்கள் கூடும் விழா காலம் என்பதால் நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதற்கான முன்னெச்சரிக்கை என்ன தான்? என்று அமைச்சர் செய்தியாளர்களிடம் கேட்கின்றார்.

மேலும் அன்றைய நாடுகளில் அன்றைய மாநிலங்களில் நோய் பரவும் அபாயம் உள்ளதால் ஏர்போர்ட்டுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை கண்காணிக்க வேண்டும் என்று சொல்கின்றார். கண்காணித்து என்ன உண்மையோ அதை தெளிவாக அப்பட்டமாக அனைவரும் முன்நிலையும் சொல்ல வேண்டும். எதையும் மறைக்காமல் இந்த அரசு செயல்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

author avatar
Kowsalya