29 ஆண்டுகள் கடந்த பெரிய மருது திரைப்படம்! விஜயகாந்த் பற்றி வெளியான முக்கியமான சீக்ரெட்!!

0
116
#image_title

29 ஆண்டுகள் கடந்த பெரிய மருது திரைப்படம்! விஜயகாந்த் பற்றி வெளியான முக்கியமான சீக்ரெட்!!

நடிகர் விஜயகாந்த் அவர்கள் நடிப்பில் வெளியான பெரியமருது திரைப்படம் வெளியாகி 29 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் திரைப்படத்தில் நடித்த நடிகர் விஜயகாந்த் அவர்களை பற்றி முக்கியமான சீக்ரெட் வெளியாகியுள்ளது.

இயக்குநர் என்.கே விஸ்வநாதன் அவர்கள் இயக்கத்தில் நடிகர் விஜயகாந்த் நடிப்பில் 1994ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி பெரியமருது திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் நடிகர்கள் எம்.என் நம்பியார், ரஞ்சிதா, பிரகதி, மகேஷ் ஆனந்த், பாண்டியன், தலைவாசல் விஜய், கவுண்டமணி, செந்தில், பொன்னம்பளம், காந்திமதி மற்றும் பலர் நடித்திருந்தனர். இளையராஜா அவர்கள் பெரியமருது திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் பெரிய மருது திரைப்படம் வெளியாகி 29 ஆண்டுகள் கடந்துள்ளது. பெரிய மருது திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. இன்றளவும் மக்கள் மத்தியில் பெரிய மருது திரைப்படத்திற்கு வரவேற்பு உள்ளது.

பெரிய மருது திரைப்படத்திற்கு முன்பே நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருந்தது. இந்த படத்திற்கு பிறகு இந்த ரசிகர் கூட்டம் இன்னும் பெரியதாக மாறியது. அந்த அளவுக்கு நடிகர் விஜயகாந்த் அவர்கள் பெரியமருது திரைப்படத்தில் நடித்திருப்பார். இந்நிலையில் பெரியமருது திரைப்படத்தில் நடித்திருந்த நடிகர் விஜயகாந்த் அவர்கள் பற்றி சீக்ரெட் வெளியாகி இருக்கின்றது.

அதாவது நடிகர் விஜயகாந்த் அவர்கள் பெரிய மருது திரைப்படத்தில் நடிப்பதற்காக மேக்கப் போட்டுக் கொள்ளாமல் நடித்தார் என்று தகவல்கள் கிடைத்துள்ளது. அந்த காலத்தில் மேக்கப் போட்டால் தான் அழகாகக் தெரிவார்கள் என்று மேக்கப் போட்டுக் கொண்ட நடிகர்கள் மத்தியில் நடிகர் விஜயகாந்த் அவர்கள் மேக்கப் படாமல் பெரிய மருது திரைப்படத்தை நடித்து முடித்து கொடுத்தார்.

இருப்பினும் மேக்கப் போடவில்லை என்றாலும் திரையில் அதே கம்பீரத்துடன் முறுக்கு மீசையுடன் நடித்து இருப்பார். பெரியவர்கள் திரைப்படத்தை பார்த்த அனைவருக்கும் தெரியும். பெரிய மருது திரைப்படம் வெளியான அதே சமயத்தில் நடிகர் சரத்குமார் நடித்த நாட்டாமை திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.