நடிகர் கமல்ஹாசன் அவர்களுக்காக கிளம்பிய பான் இந்தியா சினிமா உலகம்! மாலை வெளியாகும் இந்தியன் 2 இன்ட்ரோ!!

0
49
#image_title

நடிகர் கமல்ஹாசன் அவர்களுக்காக கிளம்பிய பான் இந்தியா சினிமா உலகம்! மாலை வெளியாகும் இந்தியன் 2 இன்ட்ரோ!!

நடிகர் கமல்ஹாசன் அவர்கள் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குநர் ஷங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் நடைபெற்று வருகின்றது. நடிகர்கள் சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, குரு சோமசுந்தரம், கல்சன் க்ரோவெர் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

அனிருத் அவர்கள் இந்தியன் 2 திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். லேகா புரொடக்சன்ஸ் இந்தியன் 2 திரைப்படத்தை தயாரித்துள்ளது. சில தினங்களுக்கு முன்னர் இந்தியன் 2 திரைப்படம் 2024வது வருடம் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி வெளியாகும் என்று அறிவித்தது. இதையடுத்து சில தினங்களுக்கு முன்னர் நவம்பர் 3ம் தேதி இந்தியன் 2 இன்ட்ரோ வெளியாகும் என்று அறிவித்திருந்தது. அதன்படி இந்தியன் 2 திரைப்படத்தின் இன்ட்ரோ வீடியோவை இந்திய சினிமாவின் பிரபல நட்சத்திரங்களான இருக்கும் நடிகர்கள் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று(நவம்பர்3) மாலை 5.30 மணிக்கு வெளியாகவுள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் இன்ட்ரோ வீடியோவை தமிழில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களும், மலையாளத்தில் நடிகர் மோகன்லால் அவர்களும், கன்னடத்தில் நடிகர் கிச்சா சுதீப் அவர்களும், ஹிந்தியில் நடிகர் அமீர் கான் அவர்களும், தெலுங்கில் இயக்குநர் ராஜமௌலி அவர்களும் வெளியிடவுள்ளனர்.

இதற்காக நடிகர்கள் ரஜினிகாந்த், கிச்சா சுதீப், அமீர் கான், மோகன்லால், இயக்குநர் ராஜமௌலி ஆகியோருடைய 90களில் இருந்த புகைப்படங்களை எடுத்து போஸ்டர் தயாரித்து வெளியிட்டு நேற்று(நவம்பர்2) வெளியிட்டது. இந்த போஸ்டர்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.