வடலூரில் கிணற்றில் குதித்த ஒரு இளம்பெண்ணை காப்பாற்றுவதற்காக குதித்த இரண்டு இளைஞர்களும் கிணற்றில் பலியாகினர். நீலகிரி மாவட்டம் கூடலூரில் அடுத்து உள்ள வடமூலை கிராமத்தை சேர்ந்தவர் ரூபி. இவருக்கு 22 வயதாகிறது.தனது வீட்டுத் தேவைக்காக இவர் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள வனப்பகுதிக்குள் விறகு வெட்ட சென்றுள்ளார்.
அந்த வனப்பகுதியில் வனத்துறையினர் தேவைக்காக 30 ஆண்டுகளுக்கு முன்பு கிணறு தோண்டப்பட்டது. இந்த கிணற்றின் ஆழம் சுமார் 100 அடி இருக்கும். ஆனால் இதில் வெறும் 20 அடிக்கு மட்டுமே தண்ணீர் உள்ளது. கிணறு தோண்டப்பட்ட இடத்தின் வழியாக அருவி செல்லும் பொழுது தவறுதலாக எதிர்பாராவிதமாக அந்த கிணற்றில் விழுந்துள்ளார். ரூபி தனது உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக கிணற்றில் உள்ள தண்ணீரில் தத்தளித்து உள்ளார். அதை அங்கிருந்தவர்கள் பார்த்தவுடன் ரூபியின் உறவினருக்கு தகவலை தெரியப்படுத்தினர். தகவலறிந்து வந்த 24 வயதாகிய ரூபியின் சகோதரரான தமிழழகன் மற்றும் உறவினரான முரளி கிணற்றில் குதித்து ரூபியை காப்பாற்ற முயன்றனர். ஆனால் இவர்களாலும் ரூபியை காப்பாற்ற முடியவில்லை. மேலும் அவர்களாலும் கிணற்றிலிருந்து வெளியே வரமுடியவில்லை.அவர்களும் கிணற்றில் சிக்கிக்கொண்டனர்.
இதனால் ரூபி, அவரது சகோதரர் தமிழழகன் மற்றும் முரளி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் அங்கே வந்து மூவரின் சடலத்தையும் மீட்டனர்.
விபத்து நடந்த கிணறு பாழடைந்த கிணறு என்று கூறப்படுகிறது. இந்த கிணற்றுக்குள் சமீபத்தில் பெய்த மழையால் செய்து அதிக அளவில் இருந்துள்ளது. அதனால்தான் காப்பாற்ற சென்றவர்களும் சிக்கித் தவித்து இறந்தனர்.
இதுகுறித்து தேவாலா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட கூடலூர் எம்எல்ஏ திராவிட மணி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்பார்வையிட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த கிணற்றை மூட வேண்டும் என்று மக்கள் வற்புறுத்தி வருகின்றனர். இதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.