உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியது:-
சுகாதார ஊழியர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் தொடர்பாக ஊழல் செய்வது கொலை செய்வதற்கு சமம் சுகாதார ஊழியர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் தொடர்பான ஊழல் குறித்து பேசிய டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், எந்த வகையான ஊழலும் ஏற்றுக்கொள்ள முடியாதது, இருப்பினும், பிபிஇ தொடர்பான ஊழல் உண்மையில் கொலைதான். சுகாதார ஊழியர்கள் இந்த உபகரணங்கள் இல்லாமல் வேலை செய்தால், நாம் அவர்களின் உயிரைப் பணயம் வைக்கிறோம். அதுவும் அவர்கள் சேவை செய்யும் மக்களின் உயிருக்கு ஆபத்து ஆகும் .
1918 ஆம் ஆண்டின் ஸ்பானிஷ் காய்ச்சலைக் கடக்க 2 ஆண்டுகள் ஆனது. ஆனால் தொழில்நுட்பத்தின் தற்போதைய முன்னேற்றங்கள் உலகம் குறுகிய காலத்தில் வைரஸை தடுக்க உதவும். நிச்சயமாக அதிக தொடர்புகளால் வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில், அதைத் தடுக்கும் தொழில்நுட்பமும், அதைத் தடுக்கும் அறிவும் நம்மிடம் உள்ளது என்று கூறினார். 1918-ன் கொடிய காய்ச்சல் ஐந்து கோடி மில்லியன் மக்களைக் கொன்றது. கொரோனா வைரஸ் இதுவரை கிட்டத்தட்ட 8,00,000 மக்களைக் கொன்றுள்ளது. மற்றும் 2.27 கோடிக்கும் மேல் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.