3G கரைசல்: இதை தெளித்தால் செடியில் ஒரு பூச்சி கூட தங்காது!! 100% ஆர்கானிக் பூச்சி விரட்டி இது!
உங்களில் பலருக்கு காய்கறி தோட்டம் வைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். சிலர் காய்கறி தோட்டம் வைத்திருப்பர். இன்றைய உலகில் விவசாயம் நவீன முறைக்கு மாறி வருகிறது. செடி நடவு செய்வதில் இருந்து அறுவடை எடுக்கும் வரை கெமிக்கல் உரம், கெமிக்கல் பூச்சி விரட்டியை தான் பயன்படுத்துகின்றனர்.
இரசாயனம் நம் உடலுக்குள் சென்றால் உடல் ஆரோக்கியம் என்னவாகும் என்ற அச்சத்தில் குடும்ப உறுப்பினர்களின் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு பலர் தங்களுக்கு தேவையான காய்கறிகளை ஆர்கானிக் முறையில் உற்பத்தி செய்து வருகின்றனர்.
அந்த வகையில் ஆர்கானிக் முறையில் விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு செடிகளில் உள்ள பூச்சிகளை கட்டுப்படுத்த அற்புத பூச்சி விரட்டி தயாரிக்கும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.
தேவையான பொருட்கள்:-
பச்சை மிளகாய்
இஞ்சி
பூண்டு
இந்த மூன்று பொருட்களையும் சம அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
3G கரைசல் செய்வது எப்படி?
Green chilli(பச்சை மிளகாய்), Ginger(இஞ்சி), Garlic(பூண்டு) இந்த மூன்று பொருட்களின் முதல் எழுத்துக்களை வைத்து 3G கரைசல் என்று அழைக்கப்படுகிறது.
இந்த மூன்று பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.
உதாரணத்திற்கு மூன்று பொருட்களையும் தலா 50 கிராம் அளவு எடுத்துக் கொண்டீர்கள் என்றால் 3 லிட்டர் தண்ணீரில் சேர்த்து கலக்கி செடிகளில் தெளித்தால் அசுவினி, மாவு பூச்சி அனைத்தும் நீங்கிவிடும்.