மூட்டு வலியை நீக்கும் 4 பொருள்கள்… இதை எப்படி பயன்படுத்துவது என பாருங்க…
வயதானவர்களுக்கும் வாலிபமாக இருக்கும் அனைவருக்கும் மூட்டு வலி என்பது தற்போதைய காலத்தில் சாதாரணமாகி விட்டது. மூட்டுவலி என்பதை போக்க மூட்டுவலி ஆயில், மூட்டுவலி ஆயில்மென்ட், மாத்திரைகள், மருந்துகள் என பலவற்றை பயன்படுத்தியும் தற்காலிகமாக பயன் தந்திருக்கும். ஆனால் நிரந்தர பயன் என்பது இருக்காது.
இந்த பதிவில் மூட்டுவலியை போக்க வெறும் நான்கு பொருள்களை பயன்படுத்தி மருந்து தயாரிக்க போகிறோம். மூட்டுவலியை போக்க நாம் எடுத்துக் கொள்ளும் பொருள்கள் அனைத்தும் நமது சமையலறையில் கிடைக்கும் பொருள்களாகும். இந்த மருந்தை தயார் செய்ய தேவையான பொருள்கள், எவ்வாறு செய்வது என்று பார்க்கலாம்.
இந்த மருந்தை தயார் செய்ய தேவையான பொருள்கள்…
* கிராம்பு
* மஞ்சள் தூள்
* இஞ்சி
* துளசி
செய்முறை…
முதலில் அடுப்பை பற்ற வைத்து பின்னர்.அதில் பாத்திரம் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
பின்னர் எடுத்து வைத்துள்ள கிராம்பு, மஞ்சள் தூள், இஞ்சி(துருவியது அல்லது தட்டியது), துளசி இந்த நான்கு பொருள்களையும் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
தண்ணீர் பாதியான அளவு மாறிய பிறகு அடுப்பை அனைத்துவிட்டு இந்த தண்ணீரை ஒரு டம்ளரில் வடிகட்டி லேசான சூட்டுக்கு வந்த பிறகு இதை குடிக்கலாம்.
இந்த கசாயத்தை தினமும் குடித்து வந்தால் மூட்டுகளின் இடையில் ஏற்படும் வலி நாளடைவில் குறையத் தொடங்கும்.