குஜராத்தில் 40,000 பெண்கள் மாயம்!! விபச்சாரத்திற்கு விற்கப்படுகிறார்களா?
குஜராத் மாநிலத்தில் கடந்த அதாவது 2016 முதல் 2020 வரை 5 வருடங்களில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் காணாமல் போய் உள்ளனர். 2016 ஆம் ஆண்டு 7105 பேர், 2017 ஆம் ஆண்டு 7712 பேர்,2018 ஆம் ஆண்டு 9246 பேர், 2019 ஆம் ஆண்டு 9268 பேர், 2020 ஆம் ஆண்டு 8290 பேர் என மொத்தமாக குஜராத்தில் மட்டும் 41, 621 பேர் காணமல் போய் இருப்பதாக என்சிஆர்பி (NCRB) தரவுகள் தெரிவிக்கின்றன.
இதை பற்றி ஓய்வு பெற்ற அதிகாரிகள் கூறும் போது, காணாமல் போகும் வழக்குகளை போலீசார் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. பெண் குழந்தைகள் காணாமல் போனால் பெற்றவர்கள் புகார் தெரிவித்து விட்டு வருடக்கணக்கில் காத்திருக்கின்றனர். மேலும் போலீசாரும் இது போன்ற வழக்குகளை தள்ளுபடி செய்து விடுகிறார்கள்.
காணாமல் போன வழக்கும் கொலை, கொள்ளை போன்ற தீவிரமான வழக்கு ஆகும். காணமல் போன சிறுமிகள் மற்றும் பெண்கள் வழக்கு, கடத்தல் தொடர்பானவைகளாகவே இருக்கிறது. இதில் போலீசார் பெரிதாக அக்கறை காட்டாததால் காணாமல் போகும் பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் தொழிலுக்கும், கொத்தடிமைகளாகவும் வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப் படுகின்றனர்.
கடந்த 5 வருடங்களில் மட்டுமே இத்தனை பெண்கள் மற்றும் சிறுமிகள் காணாமல் போய் இருகின்றனர். இதை பற்றி காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஹிரேன் பேங்கர், நாட்டின் பிரதமரின் சொந்த மாநிலத்திலேயே 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போய் இருக்கிறார்கள் என குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.