இங்கிலாந்து – ஆஸ்திரேலியா : சாம் பில்லிங்ஸ் அடித்த ரன் வீண்தான்?

0
187
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. மேலும் அனைத்து பொது சேவைகளும் முடக்கத்தில் உள்ளன. அதேபோல விளையாட்டு துறையும் மிகுந்த பாதிப்பிற்குள்ளானது. கடந்த மூன்று மாதங்களாக எந்தவித போட்டியும் நடைபெறாத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் இன்றி கடந்த ஜூலை மாதத்தில் இருந்து போட்டிகள் நடந்து வருகிறது.
அந்த வகையில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்திற்கு  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் மூன்று 20 ஓவர் போட்டிகள் முடிந்த நிலையில் இங்கிலாந்து அணி 2 – 1 என தொடரை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சாம் பில்லிங்ஸ் 118 ரன்கள் குவித்தார் ஆனாலும் அவருடைய சதம் வீணாக போனது.
Previous articleஆசிரியர்கள் தேவை – Teachers Wanted
Next articleதமிழகத்தில் மேலும் 5495 பேருக்கு கொரோனா: இன்றைய நிலவரம்!!