5 கோடிக்கு ஆசைப்பட்டு சிக்கலில் மாட்டிய மகேஷ் பாபு!.. அமலாக்கதுறை சம்மன் அனுப்பியதன் பின்னணி..

Photo of author

By அசோக்

5 கோடிக்கு ஆசைப்பட்டு சிக்கலில் மாட்டிய மகேஷ் பாபு!.. அமலாக்கதுறை சம்மன் அனுப்பியதன் பின்னணி..

அசோக்

mahesh babu

Mahesh Babu: தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் மகேஷ் பாபு. ஆந்திர திரையுலகம் இவரை பிரின்ஸ் அதாவது இளவரசன் என அழைக்கிறது. இவரின் அப்பா கிருஷ்ணா 70களில் பெரிய நடிகராக இருந்தார். எனவே, வாரிசு நடிகராக சினிமாவுக்கு வந்தவர்தான் மகேஷ் பாபு.

பல ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இவரின் ஒக்கடு படத்தை தமிழில் விஜய் நடித்து கில்லி என உருவாக்கினார்கள். விஜய் நடித்த போக்கிரி படம் கூட தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த படம்தான். தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஸ்பைடர் படத்திலும் நடித்தார். இப்போது ராஜமவுலி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்போதைக்கு எஸ்.எஸ்.எம்.பி.29 என பெயரிடப்பட்டிருக்கிறது.

இந்நிலையில்தான் மகேஷ் பாபு வருகிற 27ம் தேதி ஹைதராபத் அலுவலகத்தில் ஆஜராக வேண்டுமென அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருக்கிறது. சுரானா குரூப்ஸ் மற்ரும் சாய் சூர்யா டெவலப்பர்ஸ் ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் விளம்பர தூதராக மகேஷ் பாபு இருக்கிறார். சமீபத்தில் இந்த நிறுவனங்களின் மீது பணமோசடி புகார் எழுந்த நிலையில்தான் அமலாக்கத்துறை மகேஷ்பாபுவுக்கு சம்மன் அனுப்பியிருக்கிறது.

அந்த நிறுவனங்களை விளம்பரப்படுத்த மகேஷ் பாபுவுக்கு ரூ.5.9 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. 27ம் தேதி மகேஷ் பாபு நேரில் ஆஜராகி இதுபற்றி விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மகேஷ்பாபுவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருப்பது ஆந்திர திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.