வாய் துர்நாற்றத்தை போக்க 5 சிறந்த வழிகள்!! பாலோ பண்ணி பயன் பெறுங்கள்!

Photo of author

By Divya

வாய் துர்நாற்றத்தை போக்க 5 சிறந்த வழிகள்!! பாலோ பண்ணி பயன் பெறுங்கள்!

சில நேரங்களில் வாய் துர்நாற்றம் நம் அனைவரையும் தர்ம சங்கடமான சூழலுக்கு தள்ளிவிடும்.இந்த பாதிப்பால் பலர் அதிகம் பேச முடியாமல் தவித்து வருகின்றனர்.வாயை திறந்தாலே நாற்றம் வரும் நபர்களே கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளை பாலோ செய்து அந்த பாதிப்பை கட்டுப்படுத்தி கொள்ளுங்கள்.பூண்டு,வெங்காயம் போன்ற உணவு வகைகளில் மணமுள்ள சல்ஃபர் அதிகம் உள்ளது.அதேபோல் பால்,இறைச்சி,மீன் உள்ளிட்டவற்றில் அதிக புரதம் உள்ளது.இவையனைத்தும் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை ஊக்குவிக்கின்றன.

வாய் துர்நாற்றத்தை போக்க 10 வழிகள்:-

1.வாசனை நிறைந்த ஏலக்காய்,சோம்பு,இலவங்கம்,புதினா உள்ளிட்ட பொருட்களை உணவு உண்ட பிறகு மென்று சாப்பிடுவது நல்லது.இதனால் வாய் துர்நாற்றம் ஏற்படாமல் இருக்கும்.

2.உணவு உட்கொண்ட பிறகு ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு கலந்த தண்ணீரை கொண்டு வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும்.

3.வீட்டில் சாதாரணமாக வளர்ந்து நிற்கும் துளசியை எடுத்து வாயில் போட்டு மெதுவாக மென்று வர மெல்ல மெல்ல துர்நாற்றம் குறையும்.

4.தினமும் இரண்டு முறை பல் துலக்குவது அவசியம்.இவ்வாறு தினமும் பல் துலக்குவதால் பல் இடுக்குகளில் தங்கியிருக்கும் உணவுப் பொருள்களை வெளியேறி துர்நற்றம் ஏற்படாமல் இருக்கும்.

5.நாக்கின் சுவை நரம்புகளில் சேர்ந்துள்ள வெள்ளை படலங்களை (பாக்டீரியா) பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட சுத்தப்படுத்தும் கருவியை (Tongue cleaner) அல்லது பிரஷை கொண்டு நாக்கை சுத்தப்படுத்துவதால் வாய் துர்நாற்றம் கட்டுக்குள் வரும்.