5 நாள் தொடர் விடுமுறை.. சொந்த ஊருக்கு செல்கிறீர்களா? அப்போ இதை கவனிங்க!!

0
144
#image_title

5 நாள் தொடர் விடுமுறை.. சொந்த ஊருக்கு செல்கிறீர்களா? அப்போ இதை கவனிங்க!!

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான சென்னையில் ஐடி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் படித்த பட்டதாரிகள் பணி புரிந்து வருகின்றனர்.இதற்காக சொந்த ஊரை விட்டு சென்னைக்கு புலம்பெயர்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.இவர்கள் வார விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருப்பதால் சென்னையின் முக்கிய பெருந்து நிலையமான கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசல் மற்றும் போதிய பேருந்து வசதிகள் இல்லாதது போன்ற பிரச்சனைகளால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வார விடுமுறை நாட்களிலேயே கூட்டம் நிறைந்து காணப்படும்.இந்நிலையில் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 2 வரை தொடர் விடுமுறை என்பதினால் சொந்த ஊருக்கு செல்ல மக்கள் கூட்டம் அலைமோதும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.நாளை அதாவது செப்டம்பர் 28 மிலாடி நபி,அதனை தொடர்ந்து வெள்ளி கிழமை அரசு அறிவித்த எக்ஸ்ட்ரா விடுமுறை ஆகும்.அதையடுத்து சனி,ஞாயிறு வார விடுமுறை மற்றும் திங்கள் அதாவது அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி.

இந்நிலையில் தொடர் விடுமுறை காரணமாக மக்கள் சொந்த ஊருக்கு அரசு விரைவு பேருந்துகளில் அதிகளவில் முன்பதிவு செய்து வருகின்றனர்.இதனால் மக்கள் சிரமம் இன்றி பயணம் செய்ய அரசு பேருந்து போக்குவரத்து கழகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

அது என்னவென்றால் தொடர் விடுமுறை காரணமாக பயணிகள் நலன் கருதி மாநிலத்தின் முக்கிய இடங்களுக்கு இன்று அதாவது புதன் கிழமை முதல் 1100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவித்து இருக்கிறது.அதேபோல் தொடர் விடுமுறைக்கு பின் சொந்த ஊர்களிலில் இருந்து சென்னைக்கு வர அக்டோபர் 2 முதல் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு பேருந்து போக்குவரத்து கழகம் அறிவித்து இருக்கிறது.அதோடு தொலைதூர பயணம் மேற்கொள்வோர் TNSTC செயலியில் முன்பதிவு செய்து பயணிக்குமாறு அரசு பேருந்து போக்குவரத்து கழக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleதன்வினை தன்னச்சுடும்! காவிரி போராட்டத்தில் கர்நாடகாவிற்கு ரூ.4000 கோடி ருபாய் இழப்பு!!!
Next articleவரப்போகிறது சென்னையில் தீம்பார்க்!!!சென்னை மக்களுக்கு இனி ஜாலிதான்!!!