தன்வினை தன்னச்சுடும்! காவிரி போராட்டத்தில் கர்நாடகாவிற்கு ரூ.4000 கோடி ருபாய் இழப்பு!!!

0
24
#image_title

தன்வினை தன்னச்சுடும்! காவிரி போராட்டத்தில் கர்நாடகாவிற்கு ரூ.4000 கோடி ருபாய் இழப்பு!!!

காவிரி மேலாண்மை நீர்வாரியம் வாயிலாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது தமிழகம்.உச்ச நீதிமன்றம் தமிழகத்திற்கு தண்ணீர் வழங்குமாறு தீர்ப்பளித்திருந்தது. இத்தீர்ப்பினை ஏற்க மறுத்த கர்நாடக அரசு தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்க கூடாது என கடந்த சில நாட்களாக போராட்டம் செய்து வருகிறது.நாளை மறுநாள் முதல்(செப்டம்பர் 29) முழு கடையடைப்பு நடக்கவிருக்கிறது.

இதனைத்தொடர்ந்து கடந்த வாரத்தில் இரண்டு முறை  முழு கடையடைப்பு போராட்டம் விவசாயிகள் சங்கம் சார்பாகவும் தொழிலாளர்கள் சங்கம் சார்பாகவும் நடத்தி வருகின்றனர்.இந்த முழு கடையடைப்பு போராட்டத்தினால் கர்நாடகாவிற்கு ரூ. 4000 கோடி ருபாய் இழப்பு ஏற்ப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த பந்த் போதாது என நாளை மறுநாள் முழு கடையடைப்பு
கன்னட சலுவாளி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார். கர்நாடகா தழுவிய பந்த் போராட்டத்துக்கு 2,000 அமைப்புகள் ஆதரவு தெரிவித்துவிட்டன என்கிறார் வாட்டாள் நாகராஜ்.

கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் தொழில்கள் முற்றிலுமாக முடக்கப்பட்டு பெரும் இழப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போதைய இந்த முழு கடையடைப்பு போராட்டத்தால் கர்நாடகத்திற்கு ரூ.4000 கோடி ருபாய் இழப்பை தொழில் துறையினர் சந்தித்துள்ளனர்.கர்நாடக தொழில் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள  750 கடை உரிமையாளர்கள் பெரும் இழப்பை எதிர்கொள்ள நேரும் என்று கதறியுள்ளனர்.

இந்த முழு கடையடைப்பு போராட்டங்களால் சுமார் ரூ.100 கோடி ஜிஎஸ்டி வருமானம் குறையும் எனவும் தெரியவருகிறது.இது அரசிற்கு பெரிய இழப்பாக இருக்கும்.இந்நிலையில் ஹோட்டல் சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு இந்த இரண்டு நாள் முழு கடையடைப்பினால்  சுமார் ரூ.100 கோடி நட்டம் ஏற்படுமென கூறி புலம்பினர்.

கர்நாடக மக்களின் பேரில் நமக்கு தனிப்பட்ட முறையில் எந்த வெறுப்பும் கிடையாது.நதி நீர் எனபது அணைப்போட்டு தடுத்து வைத்துக்கொள்ளும் தனிச்சொத்து கிடையாது பொது சொத்தாகும்.

இந்நிலையில் தேசிய காட்சியாக உள்ள பாஜக மற்றும் காங்கிரஸ் தமிழகத்துக்கு ஆதரவாக பேசாமல் மௌனம் காத்துவருகின்றன.தமிழகத்தில் தமிழ்தேசியம் பேசுவோரை இனவாதிகள் என்று சித்தரிக்கும் தமிழக திராவிடக்கட்சிகள் மற்றும் நாம் அனைவரும் இந்தியர்கள் என கூறும் பாஜக கட்சிகூட கர்நாடகத்தில் காவிரி நீர்த்தரக்கூடாது என போராடுவது தான் விந்தை.இந்த ஒரே பாரதம் ஒரே இந்தியா எல்லாம் கர்நாடகத்திற்குள் சென்றால் செல்லுபடியாகது போல.தமிழர்களுக்கு தான் இந்த ஒற்றுமை வாதமெல்லாம் போல!

 

author avatar
CineDesk